More on this book
Community
Kindle Notes & Highlights
by
சி. மோகன்
Read between
February 15 - March 1, 2022
இதற்குள் பில்ஜி அந்த இடத்தை வந்தடைந்தார். வழி மறித்துக் கிடந்த ஆடுகளை, “பார்! பார்!” என்றழைத்து அங்கிருந்து அகற்றினார். மங்கோலிய மொழியில் ‘பார்’ என்றால் ‘புலி’ என்று பொருள்;
ஜெங்கிஸ்கான் தன் படையை உருவாக்கியபோது, அவர் எப்போதுமே சிறந்த ஓநாய் வேட்டைக்காரர்களையே தேர்ந்தெடுத்தார்.”
மலை, மனிதர்களையும் அவர்களுடைய விலங்குகளையும் மட்டுமல்ல, அவர்களை விடவும் திறமைமிக்க ஓநாய்களையும் காக்கிறது.
“ஓ, நான் அவற்றை வேட்டையாடுவேன்” என்று பதில் சொன்னார் முதியவர். “ஆனால் அடிக்கடி இல்லை. நாம் அவற்றைக் கொன்றுவிட்டால் மேய்ச்சல் நிலம் அழிந்துபோகும். பின் நாங்கள் எப்படி உயிர் வாழ முடியும்? இதுதான் சீனர்களாகிய உங்களுக்குப் புரிவதில்லை.”
“சரிதான்” என்றார் முதியவர். “அதுதான் விஷயம். டெஞ்ஞர் தந்தை, மேய்ச்சல் நிலம் தாய். மேய்ச்சல் நிலத்துக்கு ஊறு விளைவிக்கும் மிருகங்களையே ஓநாய்கள் கொல்கின்றன. டெஞ்ஞர் ஓநாய்களிடம் தன் கருணையைக் காட்டாமல் எப்படி இருக்க முடியும்?”
அதிக அளவில் நிலமும் மக்களும் இருப்பதால் மட்டும் எவராலும் ஒரு யுத்தத்தை வென்றுவிட முடியாது. நீ ஒரு ஓநாயா அல்லது ஆடா என்பதைப் பொறுத்தது அது.”
ஆதரவற்ற, வலுவிழந்த ஜீவனை அவன் தட்டிக் கொடுத்தான். அவனுடைய இதயம் அச்சத்தால் படபடத்தது. கொல்லும் சுபாவமுடைய ஓநாய்களிடம் படிப்படியாக நெருக்கம் கொள்வதைக் காட்டிலும், இதமும் அழகும் அமைதியை நேசிக்கும் குணமும் கொண்டு தாவரங்களை உண்டு வாழும் இவற்றைக் காப்பாற்ற அவன் ஏன் முயற்சிக்கக் கூடாது?
நீ கொலை புரிவது பற்றிப் பேச விரும்பினால், புல் வெட்டும் எந்தவொரு கருவியையும் விட மான்களே அதிக புல்லைக் கொல்கின்றன. அவை புல்வெளியை மேய்வது கொலையில்லையா? மேய்ச்சல் நிலத்தின் பெரிய உயிரை அது எடுத்துவிடுவதில்லையா?
“பிறகு ஏன் இந்த மானை விடுவிப்பது உங்களுக்கு அவ்வளவு முக்கியமானதாகப் படுகிறது” என்று அச்சத்துடன் கேட்டான்.
ஒரு மனிதன் அல்லது இனம், சரணடைவதற்கு முன்பாக மரணத்தைத் தேர்வு செய்யும் ஆன்ம பலத்தைக் கொண்டிருக்கா விட்டால், அடிமையாவதுதான் தவிர்க்க முடியாத விளைவாக இருக்கும்.
‘‘பசித்த ஓநாய்கள் ஆட்டை சாப்பிடும்போது எந்த ஒன்றையும் விட்டு வைப்பதில்லை’’ என்று தலையாட்டி ஆமோதித்தபடியே சொன்னார் முதியவர்.
‘‘இப்போதிருந்து நீ அதிக கவனமாக இருக்க வேண்டும். தாய் ஓநாய் உன்னுடைய வாசனையைப் பிடித்துவிட்டதால், நீ எங்கு போனாலும் அது உன்னைச் சும்மா விடாது.’’
‘‘நான் நீண்ட நாட்களாக உன்னை எதிர்பார்த்து இருந்திருக்கிறேன். இப்போது நீ இங்கிருக்கிறாய்’’ என அமைதியாகச் சொன்னான் ஜென்.
மனிதர்கள் அற்பமானவர்களாகவும் பேராசை மிக்கவர்களாகவும் இருப்பதை அப்போது அவன் உணர்ந்தான். ஏழு
‘‘இதை நம்மால் ஒழுங்காகச் செய்து முடிக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. சிக்கல்கள் நம்மை எதிர்நோக்கி இருக்கின்றன’’ என்றான் ஜென். ‘‘நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. ‘எல்லாக் குள்ளநரிகளும் மடியும்வரை, நாம் சண்டையை நிறுத்தப் போவதில்லை’ என்று இந்த நாடே பாடிக்கொண்டிருக்கிறது. ஆனால் நாமோ ஒரு ஓநாய்க்குட்டியை வளர்ப்பதன் மூலம், பகைவனிடமும் நட்பு பாராட்டுகிறோம்.’’
தொன்மையான ஞானியான கன்பூசியஸ் பற்றி உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும்,
ஒரு கனவான் விவாதிப்பானே தவிர சண்டையிட மாட்டான் என்ற கருத்தினைக் கொண்டு வளர்ந்த அவன், இப்போது தன்னுடைய உணர்ச்சிகளை மனிதனைப் போன்றில்லாமல் ஓநாய்த்தனமாக வெளிப்படுத்துவதை அவனே அறிந்தான்.
ஓநாயால் வளர்க்கப்பட்ட இரு சகோதரர்களே. இன்றும்கூட, அந்நகரத்தின் சின்னத்தில் ஓநாய் மற்றும் அதனுடைய இரண்டு ஓநாய்க் குழந்தைகளின் படிமங்கள் அமைந்திருக்கின்றன.
சிறுபான்மைப் பிராந்தியத்தில் ஓநாய் வளர்ப்பது, சீன வரைவியல் கோட்பாட்டை மீறிய செயல்; அதை ஆட்டு மந்தைக்கிடையே செய்வது ஓநாய்க் கூட்டத்தை வரவழைக்கும் காரியம்.
சீனாவின் மகத்தான நான்கு கண்டுபிடிப்புகளான காகிதம், அச்சடித்தல், திசைகாட்டி மற்றும் வெடிமருந்து ஆகியவற்றை விடவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆனால் இந்த ஓநாய்க்குட்டி, அதன் கண்கள் முழுவதுமாகத் திறப்பதற்கு முன்பே, அதனுடைய அம்மாவிடமிருந்து எடுக்கப்பட்டுவிட்டது; ஒரு பெரிய ஓநாய் குழி தோண்டுவதை இது ஒருபோதும் பார்த்ததில்லை. இந்தத் திறனை எந்த ஒரு நாயும் அதற்குச் சொல்லிக் கொடுத்திருக்க முடியாது;
மேய்ச்சல் நிலத்தில் இனி அவர்கள் காலூன்ற முடிவு செய்து விட்டதைப் போலிருந்தது. மனம் உடைந்த நிலையில் யாங், தன் அதிருப்தியை ஜென்னிடம் வெளிப்படுத்தினான்.
அவற்றோடு சேர்க்க ஒரு சொட்டு எண்ணெய்கூட எங்களிடம் இல்லை. ஆனால் அதை நீங்கள் சிம்னி விளக்குக்குப் பயன்படுத்துகிறீர்கள். என்ன ஒரு விரயம்! நீங்கள் அதை எங்களுக்கு நல்ல விலைக்குக் கொடுத்தாலென்ன.’’
நாம் இந்தக் குதிரைக்குட்டியை உடனடியாகக் கொல்லவேண்டும். அது இறந்துவிட்டால், ரத்தம் உறைந்த இறைச்சி ருசியாக இருக்காது.’’
‘‘இறப்பு விகிதம் மிக அதிகம்தான். குதிரை மேய்ப்பர்கள் ஓநாய்களை இந்தளவு வெறுப்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.’’
இது ஈவிரக்கமல்லாத செயல்’’ என்றான் யாங். ‘‘ஓநாய்க்குட்டி மூலம் தாய் ஓநாய் வெற்றிகரமாக வரவழைக்கப்பட்டு விட்டால், அதனுடைய குகையை நாம் சூறையாடியதும் இல்லாமல், அதனுடைய தாய்ப் பாசத்தால் அதைக் கொல்லவும் போகிறோம்.
‘ஓநாய்க்குட்டி, உனக்கு இன்னும் என்னை நினைவிருக்கிறதா? நான் உன்னுடைய அம்மா. நான் உனக்காக ஏங்குகிறேன். இவ்வளவு காலமும் உன்னை எதிர்பார்த்தபடியே தேடிக்கொண்டிருந்தேன். கடைசியாக உன்னுடைய குரலைக் கேட்டுவிட்டேன். என் அன்புக் குழந்தையே, உடனே உன் அம்மா விடம் ஓடி வா. நாங்கள் எல்லோருமே உனக்காகத் தவித்துக் கொண்டிருக்கிறோம். வா... வா... வா...’
ரஷ்யாவை வென்ற ஜெங்கிஸ்கானின் தளபதியான ஜேபே, பாய்ந்து செல்லும் குதிரையில் இருந்தபடியே, நூறடி தொலைவிலிருந்து ஒரு பொந்து நாயின் தலையைக் குறி வைத்து அடிப்பார்.
பரமவைரி.
‘‘எங்களுடைய குழந்தைகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் வேண்டுமென நாங்கள் எப்போதுமே விரும்பியிருக்கிறோம். இனி, நோயாளிகளை எருது வண்டிகளிலோ அல்லது குதிரை வண்டிகளிலோ எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டி வராது என்று நம்புகிறோம். எங்களிடம் மருத்துவமனை இல்லாததால், தேவையில்லாமல் பலர் இறக்கும்படி ஆகியிருக்கிறது. ஆனால், இனி மேய்ச்சல் நிலம் என்னாகும்?
ஒரு புலியைப் போலவோ, சிங்கத்தைப் போலவோ ஒரு சர்க்கஸில் ஒரு ஓநாய் செய்வதை நீ எப்போதாவது பார்த்திருக்கிறாயா? எந்தவொரு விலங்குப் பயற்சியாளராலும் அதை சமாளிக்க முடியாது. என்னை விடவும் நீதான் அதிகமாக ஓநாய்களைச் சுற்றித் திரிந்திருக்கிறாய்; உனக்கது தெரிந்திருக்க வேண்டும்.
சாங் பெருமூச்சு விட்டான். ‘‘நாடோடி வாழ்க்கைச் சூழ்நிலைகளில் ஒரு ஓநாயை வளர்ப்பதென்பது முடியாத காரியம்தான்.’’
நாடோடி மேய்ச்சலின் பிரதான அம்சமே, பாதகங்களைத் தவிர்ப்பதும் சாதகத்தை நன்கு பயன்படுத்திக் கொள்வதும்தான்.
ஆயிரம் ஆண்டு கால சீன அரச பரம்பரை தூக்கி எறியப்பட்டதை விடவும் பத்தாயிரம் ஆண்டு கால மேய்ச்சல் நிலத்தின் அழிவை ஏற்பதென்பது எவ்வளவு கொடுமையான விசயம்.
மூத்த குடிமக்கள் எல்லாம் போனதும், இந்த இளையவர்கள் பழைய விதிமுறைகளை எல்லாம் புறக்கணித்துவிட்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆடுகளை வளர்த்து, புதிய கார்கள், பெரிய வீடுகள், அருமையான துணிமணிகள் என அடைவதில் குறியாக இருப்பார்களென எனக்குப் பயமாக இருக்கிறது.’’