More on this book
Community
Kindle Notes & Highlights
நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைவிட நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஆராய்வதில்தான் சூட்சமம் இருக்கிறது.
நீங்கள் ஒரு பணக்காரராக ஆக விரும்பி, அதை அடைய மெதுவாகச் செல்வம் சேர்க்கும் திட்டத்தைத் தேர்ந்தெடுத்தால், உங்களுக்கு ஒரு மோசமான செய்தியைத் தெரிவிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். அது தோற்பதற்கான விளையாட்டு. அதில் உங்கள் நேரம் பணயம் வைக்கப்படுகிறது.
“மக்கள் கூட்டம் இருக்கும் இடத்தில் இருப்பது வாழ்க்கையின் நோக்கமல்ல, பைத்தியக்காரர்கள் கூட்டத்திலிருந்து தப்பிப்பதுதான் நோக்கம்.” - மார்கஸ் அரீலியஸ்
மொத்தத்தில் என்னுடைய நேரம் பணத்திற்காக விற்கப்பட்டுக் கொண்டிருந்தது.
நீங்கள் செயல்முறையைக் கடைபிடிக்க விரும்பாவிட்டால், நிகழ்வுகள் அரங்கேறாது.
“நீங்கள் எங்கு சென்றடைய வேண்டும் என்பதை நீங்கள் அறியாமலிருந்தால், எல்லாச் சாலைகளும் ஒன்றுதான்.” - லூயி கரோல்
ஒரே விஷயத்தையே திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருந்துவிட்டு வித்தியாசமான விளைவுகளை எதிர்பார்ப்பது என்பது வடிகட்டிய முட்டாள்தனம்.
“பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியாது, ஆனால் நீங்கள் படுமோசமாக இருக்கின்ற தருணங்களில்கூட, பணத்தால் உங்களை சௌகரியமாக வைத்திருக்க முடியும்.” - கிளாரா பூத் லூசெ
வேலை வருவாயை ஈட்டிக் கொடுக்கிறது. வருவாய் தகுதிக்கு மீறிய வாழ்க்கைமுறையை சுவீகரித்துக் கொள்ளத் தூண்டுகிறது. கடன் அதனைச் சாத்தியமாக்குகிறது. அந்த வாழ்க்கைமுறை மேலும் சௌகரியங்களையும் ஆடம்பரங்களையும் எதிர்பார்க்க வைக்கிறது. அதற்கு மேலும் வருவாய் தேவைப்படுகிறது.
நீங்கள் உங்களுடைய சக்திக்கு மீறி எந்த அளவுக்குப் பொருட்களை வாங்கிக் குவிக்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்களுடைய சிறைக்காலம் நீடித்துக் கொண்டேயிருக்கும்.
இப்படிப்பட்ட சுயபேச்சு அதை உங்களால் வாங்க முடியாது என்பதற்கான அபாய எச்சரிக்கையாகும். அப்படியானால் உங்களுடைய வாங்குதிறனை எப்படிக் கண்டுபிடிப்பது? நீங்கள் அதைக் கடனில் வாங்காமல் ரொக்கப் பணம் கொடுத்து வாங்கிய பிறகு உங்களுடைய வாழ்க்கைமுறையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாதிருந்தால், உங்களுக்கு அதை வாங்குவதற்கான திறன் இருக்கிறது என்று அர்த்தம்.
“எனக்கு அதிர்ஷ்டத்தின்மீது அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. நான் எந்த அளவுக்குக் கடினமாக உழைக்கிறேனோ, அந்த அளவுக்கு எனக்கு அதிர்ஷ்டம் வாய்க்கிறது.” - தாமஸ் ஜெபர்சன்
“உங்களுடைய வீடுதான் உங்களுடைய மிகப் பெரிய மூலதனம்!” என்று முழங்குகின்றனர். அது ஒரு பித்தலாட்டம்.
உங்களுடைய வருவாயின்மீது உங்களுக்குக் கட்டுப்பாடு இல்லையென்றால், உங்களுடைய பொருளாதாரத் திட்டத்தின்மீதும் உங்களுக்குக் கட்டுப்பாடு எதுவும் இருக்காது.
“நாம் இறந்து கொண்டிருக்கிறோம் என்பதை நம்முடைய வாழ்க்கையின் தொடக்க காலத்திலேயே யாராவது நம்மிடம் சொல்ல வேண்டும். அப்போது நாம் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் முழுமையாக வாழ முயல்வோம். இக்கணமே செய்யுங்கள் என்று நான் சொல்வேன். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை இப்போதே செய்யுங்கள். நாளைய தினங்கள் ஒருசிலவே இருக்கின்றன.” - மைக்கேல் லேன்டன்
கற்றலை நீங்கள் எப்போது கைவிடுகிறீர்களோ அப்போதே உங்களுடைய வளர்ச்சி நின்றுவிடும். உங்களுடைய அறிவைத் தொடர்ந்து விசாலமாக்கிக் கொள்வது உங்களுடைய பயணத்திற்கு இன்றியமையாதது.