Medical Counselling Center வெளியிட்ட பட்டியலை நாங்கள் ஆராய்ந்தோம். மாநில வாரியாகவும், OBC, SC, ST & Un reserved என்று பிரித்தும் பட்டியலிட்டு பார்த்தப்போது ஓபிசிகளுக்கு பூஜ்யம் இடங்கள் என்பதை அறிந்தோம். எல்லா மாநிலங்களும் சேர்த்து ஏறத்தாழ ஒரு எட்டாயிரம் இடங்களை, இந்த அகில இந்தியத் தொகுப்பிற்கு கொடுக்கிறார்கள். அதில் ஓபிசிகளுக்கு பூஜ்யம் என்பதை நாங்கள் வெளியிட்டபோது தான் எல்லோருக்கும் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டது.

