குரூப் A பதவிகளில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் 4.5% - 5% வரை இருந்தோம், இன்றைக்கு 10% - 11% தான் வந்திருக்கிறோம். இதற்கு அடிப்படை காரணம் கிரீமிலேயர். யாருக்கெல்லாம் இந்த இடங்களை பெற வாய்ப்பு இருந்ததோ அவர்கள் எல்லாம் கிரீமிலேயர் காரணமாக பொதுப்போட்டிக்கு போக வேண்டிய நிலை ஏற்பட்டது. மற்றவர்கள் போட்டி நிறைந்தச் சூழலை எதிர்கொண்டு எல்லா இடங்களையும் நிரப்ப வாய்ப்பின்றி போய்விட்டது.

