அதிகாரத்தில் என்னுடைய சமூகம் எந்த அளவில் இடம்பெற்றிருக்கிறது என்று பார்க்க வேண்டும். 32 நீதிபதிகள் தான் உச்சநீதிமன்றத்தில் இருப்பார்கள், எல்லோரும் ஆகிவிட முடியாது, அதில் நமக்கான பிரதிநிதித்துவம் எவ்வளவு என்று பார்ப்பது தான் சமூகநீதி. மொத்தத்தில், இடஒதுக்கீடு என்றால் பிரதிநிதித்துவ உரிமை அவ்வளவு தான்.

