OBC இடஒதுக்கீடு - வழக்கு, வரலாறு, நடப்பு. (Tamil Edition)
Rate it:
13%
Flag icon
Medical Council of India Act, 1956 ன் அடிப்படையில் இயற்றப்பட்ட விதிகளின் படி இவர்கள் இடஒதுக்கீடு தரவில்லை என்பதை எல்லாம் முன்வைத்து மிகச்சிறப்பாக வாதிட்டிருக்கிறார்.
15%
Flag icon
மத்திய அரசைப் பொறுத்தவரையில் சுதந்திரந்திற்குப் பின்னர் 2008 - ல்தான் ஓபிசி பிரிவினர்க்கு கல்வியில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துகிறோம். கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு பிறகு 2008ல் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தான் இடஒதுக்கீடு நமக்கு கிடைக்கிறது.
18%
Flag icon
Medical Counselling Center வெளியிட்ட பட்டியலை நாங்கள் ஆராய்ந்தோம். மாநில வாரியாகவும், OBC, SC, ST & Un reserved என்று பிரித்தும் பட்டியலிட்டு பார்த்தப்போது ஓபிசிகளுக்கு பூஜ்யம் இடங்கள் என்பதை அறிந்தோம். எல்லா மாநிலங்களும் சேர்த்து ஏறத்தாழ ஒரு எட்டாயிரம் இடங்களை, இந்த அகில இந்தியத் தொகுப்பிற்கு கொடுக்கிறார்கள். அதில் ஓபிசிகளுக்கு பூஜ்யம் என்பதை நாங்கள் வெளியிட்டபோது தான் எல்லோருக்கும் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டது.
21%
Flag icon
தீர்ப்புக்கு பின்னர் 2007 ஆம் ஆண்டிலிருந்து மருத்துவப் பட்ட மேற்படிப்பிலும், 2008 ஆம் ஆண்டிலிருந்து மருத்துவப் பட்டப் படிப்பிலும் பட்டியல் மற்றும் பழங்குடியினப் பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
31%
Flag icon
it is not a concession or even charity. it is our right, constituitional right.
32%
Flag icon
(adequate representation)
32%
Flag icon
(weaker section),
32%
Flag icon
(injustice & exploitation)
33%
Flag icon
தந்தை பெரியார் அவர்களின் போராட்டத்தின் விளைவாக ஏற்படுத்தப்பட்ட, அரசியல் அமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் 15(4) - கல்வியில் இடஒதுக்கீடு, அதுவும் கூட சட்டபூர்வ உரிமை தான். ஆகவே இடஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டம் கொடுத்த உரிமை, சலுகை அல்ல.
36%
Flag icon
"இது தங்களுக்கான உரிமை இல்லை சலுகை ஆகவே ஏதோ கிடைத்தால் போதும்" என்கிற மனநிலையை உருவாக்குதற்கு முயல்கிறார்கள்.
36%
Flag icon
"The reservation of seats for medical colleges / institution for respective categories shall be as per applicable laws prevailing in states / union territories"
51%
Flag icon
அதனால் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீட்டைத்தான் (OBC - 50%, SC - 18%, ST - 1%),
52%
Flag icon
27% என்பது மத்தியக் கல்வி நிலையங்களுக்கு மட்டும் தான், இதை அவர்களே கூறிவிட்டார்கள். நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், மத்தியக் கல்வி நிலையங்களில் 27% வழங்குகிறோம் என்றுச் சொல்லிவிட்டார்கள்.
57%
Flag icon
குரூப் A பதவிகளில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் 4.5% - 5% வரை இருந்தோம், இன்றைக்கு 10% - 11% தான் வந்திருக்கிறோம். இதற்கு அடிப்படை காரணம் கிரீமிலேயர். யாருக்கெல்லாம் இந்த இடங்களை பெற வாய்ப்பு இருந்ததோ அவர்கள் எல்லாம் கிரீமிலேயர் காரணமாக பொதுப்போட்டிக்கு போக வேண்டிய நிலை ஏற்பட்டது. மற்றவர்கள் போட்டி நிறைந்தச் சூழலை எதிர்கொண்டு எல்லா இடங்களையும் நிரப்ப வாய்ப்பின்றி போய்விட்டது.
58%
Flag icon
இடஒதுக்கீட்டின் அடிப்படைத் தத்துவமே, "அதிகாரத்தில் பங்கு" என்பது தான், ஆனால் இன்னமும் அந்த நிலைக்கு நாம் போகவேயில்லை.
68%
Flag icon
இடஒதுக்கீடு என்பது சமூக பிரதிநிதித்துவத் திட்டம், எந்தெந்த சமூகங்கள் எல்லாம் போதிய பிரதிநிதித்துவத்தை பெறவில்லையோ அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிச் செய்யத்தான் இடஒதுக்கீடு. ஆகவே இடஒதுக்கீட்டுக்கு பொருளாதார அடிப்படை என்பது இடஒதுக்கீட்டின் தத்துவத்திற்கே எதிரானது.
69%
Flag icon
அரசமைப்புச் சட்டம் 16(4) ல் போதிய பிரதிநிதித்துவம் இல்லாத பிற்படுத்தப்பட்டோர் (inadequate representation) என்று தான் குறிப்பிட்டிருக்கிறார்கள், போதிய வேலைவாய்ப்பில்லாத (inadequate employment) என்று குறிப்பிடவில்லை.
69%
Flag icon
அதிகாரத்தில் என்னுடைய சமூகம் எந்த அளவில் இடம்பெற்றிருக்கிறது என்று பார்க்க வேண்டும். 32 நீதிபதிகள் தான் உச்சநீதிமன்றத்தில் இருப்பார்கள், எல்லோரும் ஆகிவிட முடியாது, அதில் நமக்கான பிரதிநிதித்துவம் எவ்வளவு என்று பார்ப்பது தான் சமூகநீதி. மொத்தத்தில், இடஒதுக்கீடு என்றால் பிரதிநிதித்துவ உரிமை அவ்வளவு தான்.