'ஆரியர்' என்ற சொல் 'அரி' என்ற மூலத்திலிருந்து உருவானது என்றும் அச்சொல்லுக்கு அந்நியர் என்று பொருள் கொள்ளலாமென்றும் கருதப்படுகிறது. இக்குழுவினர் இந்தியாவிற்கு வடமேற்கில் வட்சு நதிக்கரையில் இருந்து காந்தாரத்தில் புகுந்து பாஞ்சாலத்தை நோக்கி முன்னேறி வந்திருக்கலாம் என்றும், இவர்களை இந்தோ இரானியர் என்று குறிப்பிடலாம் என்றும் புகழ் பெற்ற வரலாற்று இலக்கிய ஆசிரியர் ராகுல் சாங்கிருத்யாயன் குறிப்பிடுகிறார். அவருடைய ‘வால்காவில் இருந்து கங்கை வரை' என்ற நூலில் மானிட சமுதாயத்தினரின் வாழ்வு எவ்வாறு நாகரிகப் பரிணாமம் பெற்று வந்திருக்கிறதென்பது விவரிக்கப் பெறுகிறது.

