நீ கன்னியாயிருந்தால், எந்தக் கணமும் உன்னை விழுங்கக் காத்து இருக்கிறது என்ற கருத்தை அன்றாடம் நமது மக்கள் தொடர்பு சாதனங்கள் ஆணுக்கு ஊக்கமாகவும் பெண்ணுக்கு அச்சமாகவும் இடைவிடாது உருவேற்றிக் கொண்டிருக்கிறது. இந்தக் கருத்து எப்படி உருவாகி, நிலைத்து, இன்னும் நூற்றாண்டுக் காலங்களில் வலிமை பெற்று, பெண்ணை எந்த முன்னேற்றத்தின் பயனையும் பெற இயலா வண்ணம் பிணித்துக் கொண்டிருக்கிறது? இதைக் கூர்ந்து சிந்தித்தால், பெண்ணின் அறிவுக் கண்ணை மறைக்கும் ஒரு சாதனமாகவே திருமணம் அவளுக்கு வலியுறுத்தப்படுவதாகப் புலப்படுகிறது.

