உபநயனம் மறுக்கப் பட்டதால், வேதம் படிக்கத் தகுதியில்லை . வேத மந்திரங்களை உச்சரிக்கத் தகுதியிழந்ததால், வேள்விகளைச் செய்வதற்கும் உரிமையற்றவர்களாவார்கள். அக்காலத்துச் சொத்து உரிமை, வேள்விகளைச் செய்ய உரிமை பெற்றவருக்கே இருந்தது. அக்காலத்து உடமைகள், பெரும்பாலும் ஆடு-மாடுகள் குதிரைகளில்தான் நிலை கொண்டிருந்தன. நில உடமைச் சமுதாயம் பரவலாக வழக்கில் வரவில்லை எனலாம். ஆனால் போராட்டங்கள், நில உடமையின் காரணமாகவே நிகழ்ந்தன என்று கொள்ளலாம். பெண்களுக்கு உபநயனம் மறுக்கப்பட்ட நிலையில் சொத்து உரிமையும் இல்லாதவர்களாக ஒடுங்கினார்கள். இவ்வாறு பெண்களின் ஒடுக்கப்பட்ட பரம்பரை, சீராக இருட்டு மாயையையும் குருட்டுப்
...more

