'தாலமி' வமிசத்தினரின் சான்றாதாரங்களாகக் கிடைத்திருக்கும், “கணவனான உன்னை நான் வெறுத்தாலோ அல்லது வேறு ஒரு மனிதனை விரும்பினாலோ நான் நீ அளித்த பரிசுப் பொருளைத் திருப்பி விடுகிறேன்” என்பது ஒரு பதச்சோறு. பண்டைய எகிப்தில் சொத்து சகோதரனுக்கன்றி சகோதரிக்குச் சென்றுவிடக்கூடியதொரு காரணத்தினாலேயே சகோதரன் சகோதரி திருமணம் அதிகமாக வழக்கிலிருந்ததாகத் தெரிய வருகிறது. இத்தகைய மணமுறை கிறிஸ்து பிறந்து இரண்டாம் நூற்றாண்டு வரை வழக்கிலிருந்ததாம்.

