'ஜாமீன்' சரி; ‘எதிர் ஜாமீன்' என்று பேசப்படுவது எதனால்? ‘ஜாமீன்' என்ற தொகைக்கு மாறாகவே, நாமே அந்தப் பணத்தைக் கொடுத்துப் பெண்ணையும் கொடுக்கிறோம் என்று தோன்றவில்லை. சிறிது சிந்தனை செய்தால் உண்மை இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று புலனாகிறது. தந்தை வழிச் சம்பிரதாயம் பழக்கத்தில் வரும்போதுதான், மணமகன் சிறிதளவு பொன்னோ, அல்லது பொருளோ கொடுத்து விட்டுத் தன் இல்லத்துக்கு மனைவியை அழைத்துச் சென்றான். ஆனால் முகம்மதியர் நமது நாட்டில் புகுந்த காலங்களில் பெண்களின் சுதந்திரமான நடமாட்டத்துக்கு ஆபத்து ஏற்பட்டதாக அஞ்சினார்கள். 'தாலி' வழக்கம் இந்த முகம்மதியர் ஆதிக்கம் பெற்றதன் விளைவாகவே ஏற்பட்டது என்று ஒரு
'ஜாமீன்' சரி; ‘எதிர் ஜாமீன்' என்று பேசப்படுவது எதனால்? ‘ஜாமீன்' என்ற தொகைக்கு மாறாகவே, நாமே அந்தப் பணத்தைக் கொடுத்துப் பெண்ணையும் கொடுக்கிறோம் என்று தோன்றவில்லை. சிறிது சிந்தனை செய்தால் உண்மை இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று புலனாகிறது. தந்தை வழிச் சம்பிரதாயம் பழக்கத்தில் வரும்போதுதான், மணமகன் சிறிதளவு பொன்னோ, அல்லது பொருளோ கொடுத்து விட்டுத் தன் இல்லத்துக்கு மனைவியை அழைத்துச் சென்றான். ஆனால் முகம்மதியர் நமது நாட்டில் புகுந்த காலங்களில் பெண்களின் சுதந்திரமான நடமாட்டத்துக்கு ஆபத்து ஏற்பட்டதாக அஞ்சினார்கள். 'தாலி' வழக்கம் இந்த முகம்மதியர் ஆதிக்கம் பெற்றதன் விளைவாகவே ஏற்பட்டது என்று ஒரு கருத்தும் கூட வரலாற்றறிஞரிடையே நிலவுகிறது. ஏனெனில் 'தாலி' ஒரு பெண்ணை 'மணமானவள்' என்பதைப் பார்த்த மாத்திரத்தில் அறிவிக்கிறது. மணமான பெண்ணை முகம்மதியப்படை வீரர் தீண்டமாட்டார் என்ற அடிப்படையில், பெண்ணுக்குத் தாலி ஒரு காப்பாகவே அமைந்தது. மேலும் இதே காரணத்துக்காகப் பெண்களைத் திருமணம் செய்து கொடுப்பதில் அக்காலச் சமுதாயத்தார் மிகவும் தீவரம் காட்டியிருக்க வேண்டும். இந்தத் தீவிரம், பெண்களைக் கல்யாணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு இல்லாத நிலையில், பணமும் பொருளும் கொடுத்துக் கட்டி வைப்பதாக முடிந்திருக்க வேண்டும். பொன்னும் பொருளும் கொள்வதற்குப் பதிலாக- கொடுத்தேனும் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று ஆயிற்று. எனவே, இந்த முறை ‘எதிர் ஜாமீன்' என்ற சொல்லால் குறிக்கப் பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. மகளை மணமுடிக்க வருபவன், வரன். இவனுக்குப் பெண்ணைத் தானமாகக் கொடுப்பதுடன், 'தட்சணை' என்று கூட ஒரு பொதியையும் கொடுக்கும் வழக்கம், ஆண் ஆதிக்கம் மேலோங்கி, பெண் சகல உரிமைகளையும் இழந்த சூழ்நிலையில்தான் பரிபூர...
...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.