மனிதன் அடிபட்டதும், குருதி பெருகுகிறது; குருதி பெருகி ஓடியபிறகு, அவன் சத்திழந்து, வீழ்ந்து, மரணநிலையை அடைந்துவிடுகிறான். இதற்குப் பிறகு அவனை எழுப்ப முடியவில்லை . எனவே, குருதி அவன் அறிவுக்கு விலைமதிப் பற்ற பொருளாயிற்று. இதேபோல், பிறப்புக்குக் காரணமாக அவன் பெண்ணின் பிறப்புறுப்பை அற்புதமாகக் கருதினான். அந்தச் சின்னத்தையே வணங்கத் தலைப்பட்டான். இதுவே பின்னர், ஆணின் உறுப்புடன் சம்பந்தப்படும் இணைவாக லிங்க வடிவாயிற்று என்று கருத்துரைப்பார்.

