Kindle Notes & Highlights
‘தற்கொண்டான் பேணி' என்ற தொடரே, ஒருவனுக்கு உடமைப்பொருளாவது நியாயப்படுத்தப்படுகிறது. ‘மூத்த பொய்ம்மை' என்ற சொற்றொடரே மனசில் மின்னுகிறது. ஓர் ஆணைச் சார்ந்து அவனில் தன்னைக் கரைக்க, உடல் பொருள் ஆவி அனைத்தையும் இழக்க வேண்டும் என்ற ஒரு பக்க நியாயம் நெறியாக இந்தப் பெயர் பெற்ற உலகப் பொதுமறை நூலில் வலியுறுத்தப்படுகிறது.
தாய்ச் சம்பிரதாயத் திருமணத் தொடர்புகள், வடநாட்டில் கோன்ட், ஸந்தால், குண்டா போன்ற தொல்குடி இனத்தாரிடம் இன்னும் நிலவுகின்றன.
தென் இந்தியாவில், நாயர் சமூகத்தைச் சார்ந்த மக்களிடையே, தாயகச் சம்பிரதாயம் நிலவி வந்திருப்பதை குறிப்பிடாமல் இருக்க முடியாது. திருமணம் புரிந்துகொண்டு தனது வாழ்விடத்தை நிர்ணயிப்பது பெண்ணைச் சார்ந்ததாக இருந்து வந்திருக்கிறது. ஒரு வகையில் விலங்குகளின் வாழ்க்கை முறையினின்றும் மனிதர் பின்பற்றிய முறையாக இது கருதப்பட்ட போதிலும், நாகரிக வளர்ச்சியை எய்தியிராத தொல்கடிச் சமுதா யத்தினரிடையே பெரும்பாலும் பெண்ணின் சமுதாய மதிப்பும், சுதந்திரமும், ஆணுக்குச் சமமான உரிமைகளும், போற்றற்குரியவனவாகவே இருக்கின்றன.
'தாலமி' வமிசத்தினரின் சான்றாதாரங்களாகக் கிடைத்திருக்கும், “கணவனான உன்னை நான் வெறுத்தாலோ அல்லது வேறு ஒரு மனிதனை விரும்பினாலோ நான் நீ அளித்த பரிசுப் பொருளைத் திருப்பி விடுகிறேன்” என்பது ஒரு பதச்சோறு. பண்டைய எகிப்தில் சொத்து சகோதரனுக்கன்றி சகோதரிக்குச் சென்றுவிடக்கூடியதொரு காரணத்தினாலேயே சகோதரன் சகோதரி திருமணம் அதிகமாக வழக்கிலிருந்ததாகத் தெரிய வருகிறது. இத்தகைய மணமுறை கிறிஸ்து பிறந்து இரண்டாம் நூற்றாண்டு வரை வழக்கிலிருந்ததாம்.
'ஆரியர்' என்ற சொல் 'அரி' என்ற மூலத்திலிருந்து உருவானது என்றும் அச்சொல்லுக்கு அந்நியர் என்று பொருள் கொள்ளலாமென்றும் கருதப்படுகிறது. இக்குழுவினர் இந்தியாவிற்கு வடமேற்கில் வட்சு நதிக்கரையில் இருந்து காந்தாரத்தில் புகுந்து பாஞ்சாலத்தை நோக்கி முன்னேறி வந்திருக்கலாம் என்றும், இவர்களை இந்தோ இரானியர் என்று குறிப்பிடலாம் என்றும் புகழ் பெற்ற வரலாற்று இலக்கிய ஆசிரியர் ராகுல் சாங்கிருத்யாயன் குறிப்பிடுகிறார். அவருடைய ‘வால்காவில் இருந்து கங்கை வரை' என்ற நூலில் மானிட சமுதாயத்தினரின் வாழ்வு எவ்வாறு நாகரிகப் பரிணாமம் பெற்று வந்திருக்கிறதென்பது விவரிக்கப் பெறுகிறது.
“பூமியை மாதா என்றும் தேவி என்றும் கூறுகிறோம். பூசையும் செய்கிறோம். இந்தப் பாவிகள் பூமியின் நெஞ்சைப் பிளந்து விவசாயம் செய்கிறார்களாம்? பூமி மாதாவை எங்கள் முன்னோர் இப்படி அவமானப்படுத்தியது இல்லையே? பூமித் தாய், தானாக நமது ஆடுமாடுகள், குதிரைகளுக்குக் கனிந்த பசும்புல்லை ஏராளமாகத் தருகிறாள். நமக்கோ காய் கனிகள் பறிக்கப் பறிக்கக் குறையாது. காடுகளில் கோதுமை தானாகச் சிறு மணிகளாகக் கதிர் முற்றி இருக்கும். நமது ஆடுமாடுகள் கொழுக்க மேயும். நமக்கு உணவுக்குப் பஞ்சமிருந்ததா? “இப்போது இவர்கள் பூமிமாதாவை அகழ்ந்து கோதுமை விளைவிக்கிறார்கள். நமக்குப் புல் செழித்து வளருவதில்லை. நமது ஆடுமாடுகளுக்கு மேய்ச்சல் இடம்
...more
இந்தோ-இரானியராக இருந்த சமுதாயத்தினர், இவ்வாறு இந்தியா வந்து பல இனத்தாரோடு மோதி வென்று, கலந்து ஆரிய சமுதாயமாக ஊன்றிய காலவரையை, கி.மு. 2500-லிருந்து, 1500 வரையிலான நீட்சியில் உட்படுத்துகிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.
இந்நிலையில், இன்றைய பெண்கள் பத்திரிகை ஒன்றில் அஞ்ஞானிகளான பெண்களின் கேள்விகளுக்கு ஞான சூரியனாக, சனாதன தர்மத்தைக் காப்பாற்றிக் கொண்டு, உலகாயதம் மிஞ்சிவிட்ட உலகுக்கு நல்வழி காட்டி வரும் சமயக் குரவராகிய அருள்மிகு சங்கராச்சாரிய சுவாமிகள், அருள்பாலிக்கும் பதில் ஒன்றைக் குறிப்பிட விழைகிறேன். அஞ்ஞானக் கேள்வி: பிற மதத்தினரிடையே பெண்கள், வேத நூல்களைப் படிப்பதற்குத் தடை இல்லையே, இந்து மதத்தில் மட்டும் பெண்கள் வேதங்களைப் படிக்கக்கூடாது என்றிருப்பது ஏன்? ஞான அருள் பதில்: வேதங்களில் உள்ள கருத்துக்களே புராணங்களில் இருக்கின்றன. நீங்கள் புராணக் கதைகளையும், நீதி நூல்களையும் பகவத் கீதையும் படிக்கலாமே?.......
...more
ருக்வேதக் கவிஞர் வரிசையில் பல பெண்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. கோசா, லோபமுத்ரா (அகத்தியரின் மனைவி) அபலா, ஸூர்யா, இந்திராணி, யமி, என்று நீண்டு செல்லும் பட்டியலில், இக்கட்டுரைத் தொடர்களில் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ள தேவதைகளின் பெயர்களும் அடங்குகின்றன.
‘புருஷ ஸுக்தம்'
இவர்கள் சமமானவர்கள் என்ற தத்துவத்தை ருக் வேதத்தின் ‘ஸம்வனன ஸுக்தம்' என்ற பகுதியில் வரும் பாடல்கள் மிக அற்புதமாக வலியுறுத்துகின்றன, ஒரு சக்கரத்தின் ஆரக் கால்களைப் போன்று, ஒரே மையத்தில் இணைபவர்களாய் எத்தொழில் செய்தாலும் ஒரே நோக்கில் ஒரே சிந்தையில் குவிந்து குவிந்து சமமாக வாழ்வீர்கள் என்று உரைக்கிறது.
டாக்டர் அம்பேத்காரின் ஆய்வு நூல் உபநயனச் சடங்கில் மேவிய புதிய பரிமாணங்களையும் விரித்துரைக்கிறது. வேதகாலத்து உபநயனத்தில் முப்புரி நூலைப் பற்றிய குறிப்பே இல்லை. பிற்காலத்தில்தான் முப்புரி நூல், தந்தைவழிப் பாரம்பரியம் கூறிக் கோத்திரம் உறுதி செய்யும் சடங்குகள் எல்லாம் உபநயனத்துடன் இசைந்தன.
பெண்ணுக்கு அறிவு வேண்டாம்; அவள் உடம்புதான் முக்கியம். அவள் மக்களைப் பெறுவதற்கே படைக்கப் படுகிறாள். அந்த அளவில் அவள் முக்கியத் துவத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற அவசியங்கள், நான்கு வருணச் சமுதாயங்கள் தோன்றிய காலத்தில் ஏற்பட்டு விட்டன. உபநயனம் மறுக்கப்பட்டதும், அது தெரியாமல் இருக்க, அவளுள் மணவாழ்வின் மங்கலங்களும் சடங்குகளும் புதிய நெறிகளும் ஏற்றப்படுகின்றன. அறிவும், அழகும் இணைய, சுதந்திரமாக உலவி, வாழ்வின் மையமான ஓட்டத்தில் இருந்து ஒதுங்காமல், ஓர் ஆடவனை விரும்பிச் சேர்ந்து, மக்களைப் பெற்று வாழும் உரிமை ருக் வேதத்தில் வரும் பெண்களுக்கு இருந்திருக்கிறது.
உபநயனம் மறுக்கப் பட்டதால், வேதம் படிக்கத் தகுதியில்லை . வேத மந்திரங்களை உச்சரிக்கத் தகுதியிழந்ததால், வேள்விகளைச் செய்வதற்கும் உரிமையற்றவர்களாவார்கள். அக்காலத்துச் சொத்து உரிமை, வேள்விகளைச் செய்ய உரிமை பெற்றவருக்கே இருந்தது. அக்காலத்து உடமைகள், பெரும்பாலும் ஆடு-மாடுகள் குதிரைகளில்தான் நிலை கொண்டிருந்தன. நில உடமைச் சமுதாயம் பரவலாக வழக்கில் வரவில்லை எனலாம். ஆனால் போராட்டங்கள், நில உடமையின் காரணமாகவே நிகழ்ந்தன என்று கொள்ளலாம். பெண்களுக்கு உபநயனம் மறுக்கப்பட்ட நிலையில் சொத்து உரிமையும் இல்லாதவர்களாக ஒடுங்கினார்கள். இவ்வாறு பெண்களின் ஒடுக்கப்பட்ட பரம்பரை, சீராக இருட்டு மாயையையும் குருட்டுப்
...more
இத்தகையை குருபீடங்கள், கத்தியின்றி, இரத்தமின்றி, மக்கள் தொகுதிகளைத் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவர ஏதுவாக பலப்பல புதிய உண்மைகளை, ஆன்மீகக் கருத்துக்களை அள்ளித் தெளிக்க வேண்டி இருந்தது. அவற்றில் முக்கிய மானது, இறந்தபின் மறு உலகம் என்ற கண்டுபிடிப்பு. மரித்தவர் மீண்டும் பிறவி எடுப்பார், என்று மரணத் துக்குப்பின் உள்ள ஒரு வாழ்வைப் பற்றிய நம்பிக்கைகள் கற்பிக்கப்பட்டன. இந்த நம்பிக்கைகளின் மூலம் பெண்ணை இன்னும் ஆழக் குழியில் வீழ்த்திவிட முடிந்தது. மூளைச் சலவை செய்ய, குருபீடங்களுக்குப் பெண்களே உகந்தவர்களாயினர்!
இந்தியா முழுவதுமாக ஆதிகுடிகளின் வழக்கங்களிலுள்ள தாய்வழி முதன்மை, தந்தை வழி முதன்மையாக மாறத் திணிக்கப்பட்ட வழக்கங்களில், முதலாவது, மேன்மையான கல்வி, செல்வம், வயது, மதிப்பு என்று ஆணை உயர்ந்த நிலையில் வைத்து சம்பந்தமாகத் திருமணம் செய்து கொடுத்தல் (Hypergamy) இரண்டாவது, குழந்தை மணம், மூன்றாவது, கைம்மை நிலை என்ற கொடிய வழக்கங்களுக்குப் பெண்ணை உள்ளாக்குதல்.
பெண் சமுதாய உற்பத்திக்கான மக்களைப் பெற்றுப் பேணுகிறாள். அவளை எந்த நிலையிலும் பாதுகாக்க வேண்டும். 'இளமையில் தந்தையும்; பின்னர் கணவனும்; முதுமையில் மகனும் அவளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று விதிக்கப்பட்ட சாத்திரக் கோட்பாடே, பெண் இளமையில் தந்தையின் ஆளுகையிலும் பின்னர் கணவனின் ஆதிக்கத்திலும், முதுமையில் மகனுக்குக் கீழ்ப்பட்டும் இருப்பதற்கு உரியவள், சுதந்திரம் அவளுக்குரியதல்ல' என்று ஒரே போடாக மாற்றப்பட்டது.
“பார்த்தா! கீழான பிறவிகளாக இருக்கும் பெண்கள் (பாவ யோனிகளில் ஜனித்தவர்களாகிய ஸ்திரீகள்) மற்றும் வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோரும் என்னைச் சார்ந்தால் பரகதி அடைகின்றனர்” என்று கூறுகிறான் கண்ணன்.
அவனுடைய பெருங்கருணை மகிமைப்படுத்தப்படும் இந்த சுலோகத்தில் பெண்ணின் நிலையும் கடைசி வருணத்தாரின் நிலையும் துல்லியமாகக் குறிக்கப்படுகிறது. பெண் என்று வரும்போது, மொத்தமாகவே அவள் பாபயோனியில் பிறந்தவளாகவே கருதப்படுகிறது. அவளுக்கென்று முக்குணப் பாகுபாடு, தனித்தொழிலியல்பு எதுவும் கிடையாது.
இந்த நான்காம் வருணத்தவர் யாவர்? அவர்கள் எப்படித் தோன்றினார்கள்? பெண்களின் நிலைமைக்கு அவர்களைத் தாழ்த்த வேண்டியதன் அவசியம் எப்படி ஏற்பட்டது? நான்காம் வருணத்தவர் 'பாரதர்' என்ற இனக் குழுவில் தோன்றிய சுதரஸ் என்று க்ஷத்திரிய வம்ச மன்னனின் சந்ததியார் என்று, டாக்டர் அம்பேத்கார் தம் ஆய்வு நூலாகிய, ‘சூத்திரர் யாவர்?' என்ற ஆராய்ச்சியில் கருத்துரைக்கிறார்.
இந்த மன்னன் க்ஷத்திரியன்; வேள்விகளியற்ற இருக்கிறான். இந்த இனத்தினர், அரச பதவிகளில் வந்ததும் முதல் வருணத்தவரை இழிவுபடுத்தித் துன்பங்களுக்கு ஆளாக்கியதன் காரணமாக, அவர்கள் இவர்களுக்கு உபநயனம் செய்ய மறுத்துப் பழிவாங்கியதால் நான்காம் வருணம் தோன்றியது.
1. கணவனுடன் சிதையடுக்கி, உடன்கட்டை ஏறும் பெண், அருந்ததிக்குச் சமமாகப் பத்தினிகளுக்குரிய சுவர்க்கம் புகுகிறாள். 2. கணவனுடன் மறு உலகம் செல்பவள், மனித உடலில் உள்ள ரோமக்கால்களின் எண்ணிக்கைக்குச் சமமாக மூன்றரைக் கோடி ஆண்டுகள் சுவர்க்கம் அனுபவிக்கிறாள். 3. மகாபாவம் செய்த கணவனாக இருந்தாலும், பாம்புப் பிடாரன் பொந்தில் இருந்து பாம்பை இழுத்து விடுவதுபோல் கணவனைத் தன் பதிவிரத சக்தியினால் கொடிய நரகத்தில் விழுந்துவிடாமல் மீட்டு அவனுடன் மகிழ் உலகம் (சொர்க்கத்தில்) அநுபவிக்கிறாள். 4. கணவனுடன் உடன்கட்டை ஏறுபவள் மூன்று பரம்பரையினரின் பாவத்தைக் கரைத்து விடுகிறாள். 1) தன் தாய்வழிப் பரம்பரை, 2) தன் தந்தைவழிப்
...more
அவர்களைப் பார்த்து ராஜாராம் மோஹன்ராய் கேட்டார்: “கணவனை இழந்தவள் தானாகவே சங்கற்பம் செய்து கொண்டு உடன் கட்டை ஏற வேண்டும் என்பதுதானே விதி? உங்கள் வழிக்கே வருகிறேன்; ஆனால் நீங்கள் மரித்த கணவனுடன் அவளை உயிரோடு கயிறு கொண்டு பிணைக்கிறீரே? பின்னர், அவளை வைத்து மேலே சிதை அடுக்குகிறீர்களே? அவள் எழுந்திருக்கவே இயலாதபடி பெரிய மூங்கில் தடிகளை வைத்து அழுத்துகிறீர்களே? ஹரிதரும் மற்ற முனிவர்களும் இதையெல்லாம் சொல்லி இருக்கிறார்களா...?” இது அப்பட்டமான பெண் கொலை தவிர வேறொன்றுமில்லை. இந்தியப்
இந்த வீட்டு மகள் வேறு வீட்டுக்குச் செல்கிறாள் என்ற கனிவோடு, அவளுக்குச் சகோதரனும் மற்ற உறவினரும் கொடுக்கும் இப்பரிசுகளே, சீதனம் என்ற அவளுடைய உரிமைப் பொருளாயிற்று என்று கொள்ளலாம். இதில், பிறந்த வீட்டுச் சொத்தின் உரிமைகள் அவளுக்கு அறவே இல்லை என்ற பெரிய உண்மையும் பொதிந்து கிடக்கிறது.
'ஜாமீன்' சரி; ‘எதிர் ஜாமீன்' என்று பேசப்படுவது எதனால்? ‘ஜாமீன்' என்ற தொகைக்கு மாறாகவே, நாமே அந்தப் பணத்தைக் கொடுத்துப் பெண்ணையும் கொடுக்கிறோம் என்று தோன்றவில்லை. சிறிது சிந்தனை செய்தால் உண்மை இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று புலனாகிறது. தந்தை வழிச் சம்பிரதாயம் பழக்கத்தில் வரும்போதுதான், மணமகன் சிறிதளவு பொன்னோ, அல்லது பொருளோ கொடுத்து விட்டுத் தன் இல்லத்துக்கு மனைவியை அழைத்துச் சென்றான். ஆனால் முகம்மதியர் நமது நாட்டில் புகுந்த காலங்களில் பெண்களின் சுதந்திரமான நடமாட்டத்துக்கு ஆபத்து ஏற்பட்டதாக அஞ்சினார்கள். 'தாலி' வழக்கம் இந்த முகம்மதியர் ஆதிக்கம் பெற்றதன் விளைவாகவே ஏற்பட்டது என்று ஒரு
...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
நீ கன்னியாயிருந்தால், எந்தக் கணமும் உன்னை விழுங்கக் காத்து இருக்கிறது என்ற கருத்தை அன்றாடம் நமது மக்கள் தொடர்பு சாதனங்கள் ஆணுக்கு ஊக்கமாகவும் பெண்ணுக்கு அச்சமாகவும் இடைவிடாது உருவேற்றிக் கொண்டிருக்கிறது. இந்தக் கருத்து எப்படி உருவாகி, நிலைத்து, இன்னும் நூற்றாண்டுக் காலங்களில் வலிமை பெற்று, பெண்ணை எந்த முன்னேற்றத்தின் பயனையும் பெற இயலா வண்ணம் பிணித்துக் கொண்டிருக்கிறது? இதைக் கூர்ந்து சிந்தித்தால், பெண்ணின் அறிவுக் கண்ணை மறைக்கும் ஒரு சாதனமாகவே திருமணம் அவளுக்கு வலியுறுத்தப்படுவதாகப் புலப்படுகிறது.
மனித சமுதாய வரலாற்றை விவரிக்கும் நூலில் சமுதாயம், சுரண்டுபவர் சுரண்டப்படுபவர் என்ற வருக்கங்களாகப் பிரிவுபட்ட பின் இந்த வருக்கபேதம் நிலைத்தாலே, பிரபு வருக்கமும், அரச வருக்கமும் தங்கள் போக வாழ்க்கையை நடத்த முடியும் என்று வந்த அவசியங் களை விவரிக்கிறார்.
'பிரும்மம்' என்ற புதிரை, அடுத்து வரும் தலைமுறைகள் முழு முதலாக வைத்துக்கொண்டு கவலையின்றி, வருக்கபேத சமுதாயத்தை ஆளமுடியும் என்றே தோற்றுவித்ததாகக் குறிப்பாக்குவார்.
மனிதன் அடிபட்டதும், குருதி பெருகுகிறது; குருதி பெருகி ஓடியபிறகு, அவன் சத்திழந்து, வீழ்ந்து, மரணநிலையை அடைந்துவிடுகிறான். இதற்குப் பிறகு அவனை எழுப்ப முடியவில்லை . எனவே, குருதி அவன் அறிவுக்கு விலைமதிப் பற்ற பொருளாயிற்று. இதேபோல், பிறப்புக்குக் காரணமாக அவன் பெண்ணின் பிறப்புறுப்பை அற்புதமாகக் கருதினான். அந்தச் சின்னத்தையே வணங்கத் தலைப்பட்டான். இதுவே பின்னர், ஆணின் உறுப்புடன் சம்பந்தப்படும் இணைவாக லிங்க வடிவாயிற்று என்று கருத்துரைப்பார்.

