புதுச்சேரியில் அரவிந்தர் முன்னரே வந்திருந்தார். வ. வே. சுப்பிரமணிய ஐயரும் போய்ச் சேர்ந்தார். நெல்லைக் கலெக்டர் ஆஷ் துரையைத் துப்பாக்கியால் சுட்டுக்கொல்வதற்கு உடந்தையாக இருந்தவர் என அப்போது சொல்லப்பட்ட என் ஊர் (ஒட்டப்பிடாரம்) மாடசாமிப் பிள்ளையும் புதுவை புகுந்தார்.

