இந்த மகாநாட்டில் பாரதி மாமாதான் முன்னின்று வேண்டுவன செய்தார். பல்வேறு மாகாணத்தவர்களுடனும் அவரவரது பாஷையில் பேசி அவர்களைத் தம் வழிப்படுத்தினார். மாமாவுக்கு ஆங்கிலம், ஸம்ஸ்கிருதம், ஹிந்துஸ்தானி, தெலுங்கு முதலிய பல பாஷைகள் தெரியுமெனப் பின்னால் அவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.

