More on this book
Kindle Notes & Highlights
Read between
February 6 - February 6, 2021
வ. உ. சி. சுப்பிரமணியம், உதவி ஆசிரியன், ‘தினமணி’
அங்கிருந்து நான் பட்டணம் (town) போகிற வருகிற வழியில்
முண்டாசுக் கட்டுக்கும் முறுக்கு மீசைக்கும் பெயர் பெற்றது எங்கள் ஜில்லா.
உசாவினார்.
அவாளை எனக்கு நன்னாத் தெரியும்.
இந்த முதல் சந்திப்பும் பேச்சும் என்னைச் சோழனாகவும் அவரைக் கம்பனாகவும் நான் நினைக்கும்படி செய்தது.
சுப்பிரமணிய பாரதியும் நானும் சோழனும் கம்பனுமாயிருந்தது மாறிக் கடைசியில் மாமனும் மருமகனும் ஆயினோம்.
காளிதேவிக்கு வங்கத்தில் ஆடு பலி கொடுப்பதைக் கண்டித்து விபினசந்திரர் பேசிய பேச்சிற்கு மாமா உருக்கத்துடனும் ஆவேசத்துடனும் ஒரு வியாக்கியானம் செய்து முடித்தார்.
மண்டையம் கூட்டத்தாராகிய திருமலாசாரியார்,
அவ்வேலையை வெற்றிகரமாக நிறைவேற்றி வைப்பதன் பொருட்டு நான் அரசனாகவும் மாமா மந்திரியாகவும் மாறினோம்.
அமிதவாதிகள் (தீவிரவாதிகள்)
எங்களுடன் வந்தவர்களில் சென்னை அட்வகேட் ஸ்ரீமான் எஸ். துரைசாமி ஐயர், எம். ஏ. பி. எல், ஸ்ரீமான் வி. சக்கரை செட்டியார் பி.ஏ.பி.எல்., ஆகிய இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள்.
நகரின் நடுப்பாகத்திலுள்ள மாளிகை(பங்களாக்)களில் திலகர் முதலிய பம்பாய் பிரதிநிதிகளும், வேறு சில மாளிகைகளில் அரவிந்தர் முதலிய வங்கப் பிரதிநிதிகளும் தங்கியிருந்தார்கள்.
திலகருக்கும் ஏனைய தலைவர்களுக்கும் உள்ள வித்தியாசம் ஒன்றை இங்குக் குறிப்பிட வேண்டியது அவசியம் என நினைக்கிறேன். (இது இக்காலக் காங்கிரஸ் தலைவர்களது கண்ணிலும் படுவதாக!) அவர் எக்காரியத்தைச் செய்ய விரும்பினாலும், அக்காரியத்தைப்பற்றி முதலில் தம்முடைய சிஷ்யர்களைக் கலந்து ஆலோசனை செய்வார். தமது கருத்தும், அவர்களது அபிப்பிராயமும் மாறுபடுமாயினும் தமது அபிப்பிராயத்திற்கு அனுசரணையான விஷயங்களையெல்லாம் காரணகாரியத்தோடு எடுத்துச்சொல்லி விவாதிப்பார். தமது அபிப்பிராயம் அவர்களால் நிராகரிக்கப்படுமாயின், தமது சிஷ்யர்களின் அபிப்பிராயப்படியே முடிவு செய்வித்து அதனையே தாம் முன்னின்று முடிப்பார்.
“உன் இடத்திற்குப் போ! பேசாதே!” (Go to your seat, Don't speak.) எனப் பேய்க் கூச்சலிட்டுப் பெருங் குழப்பம் செய்தனர்.
“உம் இடத்திற்குப் போம்! உம் வாயைத் திறவாதேயும்!” (Go to your seat! Don't open your mouth.) என்று பெரும் கூச்சலிட்டார்கள்.
அச்சமயத்தில் மேடை மீதிருந்த மிதவாதிகளில் சிலர் தாம் அமர்ந்திருந்த நாற்காலிகளைத் தம் தலைக்கு மேலே தூக்கித் திலகர் மேல் எறிய முயற்சித்தனர்.
மிதவாதத் தலைவர்கள் குண்டர்களோடும் சில பிரதிநிதிகளோடும் பந்தலைவிட்டு வெளியேறிப் போய்விட்டனர்.
தேசபக்திக்கு வெளியேதான் திலகரது வைதீகக் கோட்பாடு எல்லாம் என்பது தெளிவு.
இந்த மகாநாட்டில் பாரதி மாமாதான் முன்னின்று வேண்டுவன செய்தார். பல்வேறு மாகாணத்தவர்களுடனும் அவரவரது பாஷையில் பேசி அவர்களைத் தம் வழிப்படுத்தினார். மாமாவுக்கு ஆங்கிலம், ஸம்ஸ்கிருதம், ஹிந்துஸ்தானி, தெலுங்கு முதலிய பல பாஷைகள் தெரியுமெனப் பின்னால் அவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.
பம்பாய் மாகாணத்திற்குத் திலகரும், வங்கத்திற்கு அரவிந்தரும், சென்னை மாகாணத்திற்கு நானும் காரியதரிசியாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றோம்.
மாமாவும் நானும் ஈருடலும் ஓருயிருமாக வேலை செய்தோம் என்றால் மிகையாகாது. எங்களைச் சிலர் "இரட்டையர்'' என்றே கேலியாகக் குறிப்பிடுவார்கள். என்னைக் கண்டால் மாமாவைக் காணலாம்; அவரைக் கண்டால் என்னைக் காணலாம்.
ஒரு காலத்தில் மேற்கே உரோம் தேசத்திற்கும் கிழக்கே ஜாவா, சுமத்ராவுக்கும் அப்பாலும் தமிழ்க்கப்பல் போய்வந்தது. அவர்கள் சுதந்திரமாக வாழ்ந்து வந்தனர். எனவே தமிழர்கள் மீண்டும் கடல்மேல் செல்வது எவ்வாறு என்பதைத் திட்டமிட்டேன்.
இத்திட்டத்தின் விளைவுதான் சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி.
கப்பல் கம்பெனியைக் கண்டு வெள்ளையர் வெகுண்டெழுந்தனர். அவர்களின் வியாபாரமும் கடலாதிக்கமும் நாசமடையத் தொடங்கியது. கப்பல் கம்பெனிக்குக் காரணஸ்தனான என்னைச் சிறைக்குள் தள்ள விரும்பினார்கள் வெள்ளையர்கள்.
நாங்கள் கைது செய்யப்பட்டதினால் ஆத்திரமடைந்த மக்கள் திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் பல அடாத செயல்கள் புரிந்தனர். இதற்குப் பயந்து தூத்துக்குடியிலிருந்த வெள்ளையர்கள் தங்கள் இரவுகளைக் கப்பலிலேயே சிலநாள் கழித்தார்கள். கழிக்க வேண்டியது ஏற்பட்டது.
புதுச்சேரியில் அரவிந்தர் முன்னரே வந்திருந்தார். வ. வே. சுப்பிரமணிய ஐயரும் போய்ச் சேர்ந்தார். நெல்லைக் கலெக்டர் ஆஷ் துரையைத் துப்பாக்கியால் சுட்டுக்கொல்வதற்கு உடந்தையாக இருந்தவர் என அப்போது சொல்லப்பட்ட என் ஊர் (ஒட்டப்பிடாரம்) மாடசாமிப் பிள்ளையும் புதுவை புகுந்தார்.
நான் புதுச்சேரிக்குச் சென்றேன்.
சின்னாள் கழித்தேன்.
மாமாவும் நானும் எங்கள் நண்பர் அரவிந்தர் மாளிகைக்குச் சென்றோம்.
"பிள்ளைவாள், நாங்கள் ஒரு பத்திரிகை நடத்தவே திண்டாடும்போது இருபத்தேழு பாஷைகளில் பத்திரிகை நடத்துவது என்பது சாமான்யமா? அதற்கு எவ்வளவு ஆள் வேண்டும்? எவ்வளவு பணம் வேண்டும்? இதெல்லாம் நடக்கிற காரியமா? ஓய்?'' எனக் கேட்டார்.
தமிழ்நாடு
‘எங்களுக்குப் பசிக்கிறது, முதலில் சோறு போடு’ என்றார்கள். போட்டேன். இருவரும் சாப்பிட்டனர். சாப்பிட்டுவிட்டு நீங்கள் வந்தவுடன், அவர்களை எழுப்பும்படிச் சொல்லிவிட்டு பாயும் தலையணையும் கேட்டார்கள். படுக்கையை எடுத்துக் கொடுத்தேன். வாங்கிக்கொண்டு தார்சாவிற்குச் சென்றுவிட்டார்கள்”
சுவாமிகள் யாரோ?'' என்றேன். ''ஒரு பெரியவர்'' என்றார் மாமா.
கடையிலிருந்து ஏற்கனவே வாங்கி வந்து வைத்திருந்த ஒரு ஜோடிப் புது வேஷ்டிகளையும், சாமியாரது பண முடிச்சுக்களையும் நான் அவரிடம் கொடுத்ததும் சாமியாருக்குப் பரமானந்தம்!
ஒரு சிறு 'அமிருதாஞ்சன்' டப்பாவிலிருந்து ஏதோ ஒரு லேகியத்தை எடுத்து ஆளுக்கு ஒரு எலுமிச்சங்காய் அளவு வாயில் போட்டுக்கொண்டனர். அவர்கள் கொம்மாளம் அதிகமாயிற்று. ''அது என்ன மாமா?'' எனக் கேட்டேன். “அதுவா, மோக்ஷலோகத்திற்குக் கொண்டுபோகும் ஜீவாம்ருதம்” என்றார் மாமா. எனக்கு விஷயம் விளங்கிவிட்டது. “அட, பாவிகளா! எலுமிச்சங்காய் அளவா? நீங்கள் நாசமா...” “எல்லாம் உனக்குப் பயந்துதான் இந்தச் சிறிய அளவு. இல்லாவிட்டால்...” என்று சாமியார் முதுகில் ஒரு அடி கொடுத்துக்கொண்டே மாமா வெறிப் பிடித்தவர் மாதிரி சிரித்தார். மாமாவின் மாற்றத்திற்கு இம்மருந்துதான் காரணம் என்று நிச்சயமாய்த் தெரிந்துவிட்டது.
சாமியார் சரீர கனத்திலும், லேகியம் தின்பதிலும் தவிர மற்றபடி பேச்சு முதலியவற்றில் மக்காகவே இருந்தார். அறிவின் சிகரமான மாமாவுக்கு இந்த மக்கினிடத்தில் எவ்வாறு பற்று உண்டாயிற்று என்று அதிசயித்தேன்.
ஐயர் வீட்டில் இல்லை. எனவே நாங்கள் மூவரும் ஐயர் வீட்டு மாடிக்குச் சென்று அங்கிருந்த கட்டில்களில் படுத்துக்கொண்டு கண் துயின்றோம்.

