More on this book
Kindle Notes & Highlights
Read between
December 30, 2020 - January 10, 2021
அப்போது அவர்கள் முன்பு திலகர் நின்ற நிலை, ஆஹா! இன்றும் அன்றுபோல என் மனக்கண்ணில் தோன்றுகிறது. அன்று அவர் நின்ற நிலையை மதம் பொழிந்து கர்ஜித்துக்கொண்டிருந்த பல நூறு யானைகளின் முன் அமைதியுடன் வேண்டுமென்றே அடங்கி நின்ற சிங்க ராஜாவின் நிலைக்கு ஒப்பிடலாம்.
இந்தச் சமயத்திலெல்லாம் மாமாவும் நானும் ஈருடலும் ஓருயிருமாக வேலை செய்தோம் என்றால் மிகையாகாது. எங்களைச் சிலர் "இரட்டையர்'' என்றே கேலியாகக் குறிப்பிடுவார்கள். என்னைக் கண்டால் மாமாவைக் காணலாம்; அவரைக் கண்டால் என்னைக் காணலாம்.
“சிதம்பரம், மானம் பெரிது! மானம் பெரிது! ஒருசில ஓட்டைக் காசுகளுக்காக எதிரியிடமே அக்கப்பலை விற்றுவிட்டார்களே, பாவிகள். அதைவிட அதைச் சுக்கல் சுக்கலாக நொறுக்கி வங்காளக் குடாக்கடலில் மிதக்க விட்டாலாவது என் மனம் ஆறுமே! இந்தச் சில காசுகள் போய்விட்டாலா தமிழ்நாடு அழிந்துவிடும்? பேடிகள்!”
மாலை சுமார் 3 மணிக்கு அவர்களிருவரும் பேயிரைச்சலிட்டு வார்த்தையாடிக்கொண்டிருப்பதைக் கேட்டு நான் விழித்துக்கொண்டேன். ஒரு சிறு 'அமிருதாஞ்சன்' டப்பாவிலிருந்து ஏதோ ஒரு லேகியத்தை எடுத்து ஆளுக்கு ஒரு எலுமிச்சங்காய் அளவு வாயில் போட்டுக்கொண்டனர். அவர்கள் கொம்மாளம் அதிகமாயிற்று.
அறிவின் சிகரமான மாமாவுக்கு இந்த மக்கினிடத்தில் எவ்வாறு பற்று உண்டாயிற்று என்று அதிசயித்தேன்.

