தன்னகலி மூலக்கூறு அவ் வினோதமான மூலக்கூறுக்கு அதிசய பண்பு இருந்தது. சுற்றுப்புறத்திலிருந்து அணுக்களைத் திரட்டி தன்னைப் போலவே வடிவமுடைய, மூலக்கூறினைப் படைக்கும், பெற்றெடுக்கும் வல்லமை அதற்கிருந்தது. அது படைத்த பிரதிபிம்ப மூலக்கூறுகளுக்கும் தாயின் அதே குணம் இருந்தது. அதாவது தன்னையே நகலெடுக்கும் திறம். ஆதலால் அவற்றின் பெயர் தன்னகலிகள்!