Kindle Notes & Highlights
Read between
January 2 - January 9, 2021
பிரபஞ்சம் பரிணாம மயமாய் உள்ளது. இந்த ரகசியத்தை முதலில் அறிந்து சொன்னது வேதமே. பரிணாமி என்கிற சொல் உபநிடதத்தில் உள்ளது.
பிரகிருதி மாயையில் மூன்று குணங்கள் இருந்தன. மூன்றும் இஷ்டம்போல் தமக்குள் கலந்து, மீண்டும் கலந்து பலவாகப் பெருகிப் பெருகிப் பேரண்டமாக விரிவுற்றது.
புருஷன் என்றால் கிரகஸ்தன், வீட்டுக்காரர், ஆத்துக்காரர். பிரகிருதி என்பது வீடு. வீடு வேறு, அதில் வசிக்கும் ஆள் வேறு.... இது நம் கதை. கடவுளைப் பொருத்தமாட்டில் வீடும் அவரே, வசிப்பவரும் அவரே. புருஷன்-பிரகிருதி இரண்டும் கடவுளே. சத்தியம் ஞானம் அனந்தம் ஆக இருப்பது புருஷன்.
கிருதி என்பது ‘க்ருத்’ என்கிற சொல்லிலிருந்து பிறந்தது. கிருத் என்றால் செய்தல், உண்டாக்குதல், மாற்றுதல் என்று பொருள். பிரகிருத் என்றால் எல்.....லாவற்றையும் உண்டாக்கக்கூடிய பொட்டென்ஷியல் உடையது என்று பொருள். பிரபஞ்சத்திலுள்ள சர்வ சர-அசரங்களைப் படைக்கக்கூடிய வல்லமை உடையது பிரகிருதி.
பிரகிருதி என்பது அனைத்தையும் செய்வதற்குத் தேவையான பொருளையும் வல்லமையையும் தன்னுள் அடக்கி வைத்திருப்பது.
இருப்பதெல்லாம் இருவகைத் துகள்களே முடிவில் இருவகைத் துகள்கள்தான் உள்ளன என்கிற முடிவுக்கு அவர்கள் வந்தனர். அவை விசைத் துகள், பொருள் துகள் (ஃபோர்ஸ் பார்ட்டிக்கிள், மேட்டர் பார்ட்டிக்கிள்) என்பன. விசைத் துகளுக்கு போஸான் என்று பெயரிட்டனர். பொருள் துகளுக்கு ஃபெர்மியான் என்று பெயரிட்டனர்.
மாயத்துகள்கள் குண்டூசி முனை அளவுடைய ஆகாய இடத்திலும் இன்னதென்று சொல்லமுடியாத, மாயத்துகள்கள் (விசையா, பொருளா என்று பிரித்தறிய முடியாத வெர்ச்சுவல் பார்ட்டிக்கிள்கள்) நொடிப் பொழுதில், பல கோடி மடங்கு சிறிய நேரத்திற்குள், பல பில்லியன் எண்ணிக்கையில் இடைவிடாது தோன்றித் தோன்றி மறைகின்றன என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். ‘கேஸிமிர்’ விளைவு எனும் பரிசோதனையின் மூலம் இந்த மாயத்துகள்கள் இருப்பதையும் அவை மாய நிலைவிட்டு நிஜத்துகளாக மாறுவதையும் கண்டு பிடித்துள்ளனர்.
மாயத்துகள்கள் மாயமாகவே தோன்றி மறைந்தாலும், தகுதியான ஆற்றலை வழங்கும்போது மாயத்துகள்கள் நிஜத்துகள்களாகின்றன. இதையும் பலமுறை பரிசோதித்து உறுதி செய்தனர். ‘ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ் ரேடியேஷன்’ என்றொரு நிகழ்ச்சி. கருந்துளைகளின் வெளிப்பரப்பில் (நிகழ்ச்சி விளிம்பு) இது நடைபெறுகிறது. இதில் மாயத்துகள்கள் நிஜத்துகள்களாகின்றன என்றொரு கணக்கு இருக்கிறது.
கடவுளின் இச்சா, கிரியா, ஞான சக்திகள் ஆற்றல் களமாக இருந்தபடி தனித்தனியாகப் பிரகிருதியில் செயல்பட்டு மாயத்துகள்களை நிஜத் துகள்களாக்குகின்றன. அவ்வாறு தோன்றிய நிஜத்துகள்களில் இச்சா சக்தி தூண்டி உண்டானது ஃபெர்மியான்கள் - பொருள்துகள்கள். கிரியா சக்தி தூண்டி உண்டானது போஸான்கள்- விசைத்துகள்கள். ஞான சக்தி தூண்டி உண்டானது இதுவரை விஞ்ஞானம் அறிந்திராதது. தனித்து நில்லாமல் போஸான்-ஃபெர்மியான்களுடன் சேர்ந்தே இருப்பது. இத்துகள்களைச் சத்துவான் என்று அழைக்கலாமோ?
முக்குணங்கள் பிரகிருதி மாயை கடவுளது மூன்று சக்திகளின் தூண்டலால் மூவகைக் குணங்களைப் பெறுகிறது. மூவகைத் துகள்களை உருவாக்குகிறது. அவற்றிற்கு மூன்று பெயர்கள் சாஸ்த்திரம் வழங்கியிருக்கிறது.
ஞானசக்தி தூண்டுதலால் உண்டான- விஞ்ஞானம் கண்டுபிடிக்கப்படாத- சத்துவான்கள். சத்துவம் என்று இதன் பெயர். கிரியா சக்தியின் தூண்டுதலால் உண்டானது ஃபோஸான்கள்- ரஜோ குணத்துகள்கள் இச்சா சக்தியின் தூண்ட...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
கோயில்களில் ஒவ்வொரு இரவும் ஈசனை, ஈஸ்வரியின் பள்ளியறைக்குக் கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது புருஷன் பிரகிருதி இணைவின் அடையாளம். இதன் விளைவாகப் பஞ்ச பூதங்கள் பிறக்கின்றன. அதன் அடையாளமே பூதகணாதிபதி-கணபதி. இது தாமஸ இருப்பு நிலை. ஞானவேல் முருகன் அல்லது சுப்பிரமணி சத்துவகுண நிலை. வீர பத்திரன் ராஜஸ குண நிலையின் அடையாளம். பிரக்கிருதியின் சுழற்சி, காலம் எனப்படும். அதுவே காளி, மாகாளி, அங்காளி.
கலப்பு - மாற்றம் - தேர்வு - ஏற்றம் என்பவை பரிணாமம் ஆகும்.
பூதம் என்றால் தோன்றுதல், மலர்தல், தோன்றா நிலையிலிருந்து தோற்றத்திற்கு வருதல் என்று அர்த்தம்.
பிரகிருதியில் புருஷன் எப்படிப் நீக்கமற எல்லா அணுத்துகள்களிலும் நிறைந்து உள்ளதோ அதுபோல், சூக்கும சரீரமும் அது சார்ந்திருக்கும் உடலின் முழு அளவிலும் கலந்து நிறைந்திருக்கும்.
இந்தத் தேடல் முடிவில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. வீடு நாடாகிறது, நாடு உலகமாகிறது. உலகம் மூவுலகமாகிறது......
தன்னகலி மூலக்கூறு அவ் வினோதமான மூலக்கூறுக்கு அதிசய பண்பு இருந்தது. சுற்றுப்புறத்திலிருந்து அணுக்களைத் திரட்டி தன்னைப் போலவே வடிவமுடைய, மூலக்கூறினைப் படைக்கும், பெற்றெடுக்கும் வல்லமை அதற்கிருந்தது. அது படைத்த பிரதிபிம்ப மூலக்கூறுகளுக்கும் தாயின் அதே குணம் இருந்தது. அதாவது தன்னையே நகலெடுக்கும் திறம். ஆதலால் அவற்றின் பெயர் தன்னகலிகள்!
பரிணாம வாதம் இயற்கைத்தேர்வை முன் வைக்கிறது. இது மிகவும் சிலாக்கியமானது என்பதில் சந்தேகமேயில்லை. இயல்பியலில் நியூட்டன், ஐன்ஸ்டின் ஆகியோருக்கு எத்தனை மதிப்பு உண்டோ அத்தனை மதிப்பு டார்வினின் ‘இயற்கைத் தேர்வின் மூலம் பரிணாமம்’ என்கிற கருத்துக்கு உண்டு.
நெருக்கடியிலிருந்து தப்பிப் பிழைத்து இனவிருத்தியை வெற்றிகரமாகச் செய்வதற்குத் தோதான மாற்றங்கள் தேர்வாகின்றன. இதுவே இயற்கைத் தேர்வு. இது உயிரினத்தின் புறத்திலிருந்து செயல்படுவதால் புறத்தேர்வு என்று நான் அழைக்கிறேன். இதற்குக் காரணம் இருக்கிறது. அக்காரணம் ‘அகத்தேர்வு’ என்று இன்னொரு தேர்வை நான் முன்வைக்கிறேன். இது அறிவியலுக்குப் புதியது. ஆன்மிகத்துக்கும் புதிது.
சூக்கும உடலில் ஐம்புலன்களும், ஐந்து செயல் கரணங்களும் உள்ளன. இவற்றுடன் மனம் எனும் கரணமும் இருக்கிறது. இது ஈசனின் உடல். மூலக்கூறுகளில் தன்னகலாக்கம் தூண்டப்பட்டதற்குக் காரணமே சூக்கும சரீரத்தின் ‘உபஸ்தம்’ எனும் இனச் சேர்க்கைத் தூண்டலே.
எந்த விதத்திலும் பரிணாமவாதத்தைப் படைப்புவாதம் முரண்படவில்லை. பரிணாமமே கடவுளின் திட்டமாகும். கடவுள் என்பதே பரிணாமம்தான். பிரகிருதியின் பரிணாமமே உண்மையில் ஈசனாகும். விதி பிறழாமல் பிரகிருதியை இயக்கி அண்டசராசரங்களை ஆக்குவதால் கடவுளை இறைவன் என்கிறோம். பிரகிருதியை ஜகத் என்கிறோம். ஜகத் என்றால் மாறுவது என்று பொருள். மாறுவதை மாறாத ஒன்று வழி நடத்தி ஜகஜீவனாக ஆகிறது.