Kindle Notes & Highlights
மகாவீரர் 24வது தீர்த்தங்கரராகக் கருதப்படுபவர். தீர்த்தங்கரர் என்கிற சொல்லுக்குப் பிறவிக் கடலைக் கடக்க உதவுபவர் என்று பொருள்.
வேத காலத்து ரிஷியாகக் கருதப்படும் ரிஷப தேவரையே சமணர்கள் முதல் தீர்த்தங்கரர் என்கிறார்கள்.
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டச் சொன்னார் இயேசுநாதர். மகாவீரர் சொன்னது இந்த அஹிம்சை அல்ல. யாரோ ஒருத்தன் எதற்காக இன்னொருத்தனின் கன்னத்தில் அறையவேண்டும்? அந்த யாரோ ஒருவனின் முதல் வன்முறையே கூடாது என்பதுதான் அவர் கட்சி.
சமணம் இந்த தவம் அல்லது தியானத்தை நான்கு விதமாகப் பிரித்துக் காட்டுகிறது. ·ஆர்த்த தியானம் ·ரௌத்திர தியானம் ·தர்ம தியானம் ·சுக்ல தியானம்
மகாவீரரின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளுள் ஒன்று, மனிதன் தன்னைத்தானே அறிவதற்கான வழிகள் என்னவென்பது. நான்கு வழிகளை அவர் முன்வைக்கிறார். தூய காட்சி, தூய அறிவு, தூய நடத்தை, தவம்.