கன்னட மொழி பேசும் தேவாங்க செட்டியார் மைசூர் பகுதியில் வாழ்ந்த போது 'வீரமல்லம்மாள்' என்ற பெண்ணையும், வேலூரில் வசித்த பிள்ளைமார் இனத்து 'வேலம்மாள்' என்ற பெண்ணையும், திப்புசுல்தான் திருமணம் செய்து வைக்கும்படி கட்டாயப்படுத்தினான். பிற சமூகத்தினைச் சார்ந்தவனுக்கு மணம் செய்து கொடுக்க மனமின்றி மகள் மறுத்து, தாங்கள் வாழ்ந்த இடத்திலிருந்து இரவோடு இரவாகப் புலம் பெயர்ந்ததாகக் கதை கூறுகின்றனர்.

