பலமுள்ள சாதியினரை நேரிடையாக எதிர்கொள்ள முடியாமல் பலமிழந்த சாதியினர் பயன்படுத்துகின்ற பல இலக்கிய வடிவங்களைத்தான் நலிந்தோரின் ஆயுதம் என்கிறோம். உயர்சாதியினரைக் கிண்டலடித்தும், நையாண்டி செய்தும் பாடல், நகைச்சுவை, சிறுகதைகள், கவிதை, பழமொழிகள், விடுகதைகள் போன்றவை உருவாக்கப்படுகின்றன. இந்த வடிவங்களில் உயர்சாதியினரை எதிர்க்கிற தொனி தூக்கலாகவே வெளிப்படுகிறது. இதன் மூலம் அவர்களை எதிர் கொண்டு விட்டது போல ஒரு கற்பனையான திருப்தியும் ஏற்படுகிறது.

