'கலகக்காரர்களும் எதிர் கதையாடல்களும் ' என்ற பெயரிலான கட்டுரைகளின் தொகுப்பு இந்த அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சொல்லப்பட்ட செய்திகளுக்கும், அவற்றிலிருந்து கட்டப்பட்ட 'தற்காலத் தமிழகம்' என்ற பெருங்கதையாடலுக்கும் எதிரான வட்டாரம் சார்ந்த பல்வேறு எதிர் நிலைப்பாடுகளைப் பதிவு செய்வதே இத்தொகுப்பின் முதன்மைப் பணியாக அமைகின்றது. இவ்வாறு, நிறுவனமயப்பட்ட பெருங்கதையாடலுக்கு எதிராக முன் வைக்கப்படும் கலகக்கதையாடல்கள் பண்பாட்டுத் தளத்தை எல்லோருக்கும் பொதுவான வெளியாக மாற்றக்கூடும். அப்படியொரு வெளி உருவாகிற தருணத்தில், அதில் குறுக்கும் நெடுக்குமென பல்வேறு கதையாடல்கள் சமகாலத்தில் இயங்கக்கூடிய
...more

