தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 19 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்வதாகக் கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் நூற்றுக்கு மேற்பட்ட உட்பிரிவுகள் உள்ளதாக அறியப்படுகிறது. அவர்களில் முதன்மைச் சாதியாக பறையர், பள்ளர், அருந்ததியர் உள்ளனர். பத்தொன்பது சதவிகித தாழ்த்தப்பட்ட மக்களில் அருந்ததியர் சுமார் 3 சதவிகிதம் உள்ளனர். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகட்டத்திலேயே பள்ளர், பறையர், அருந்ததியர் எழுச்சிக்காகச் சில தலைவர்கள் தோன்றி அவரவர் மக்களுக்கு சங்கங்களை தோற்றுவித்தனர். இதில் அருந்ததியினருக்கென்று 1920 ஆம் ஆண்டு எல்.சி. குருசாமி என்பவர்’அருந்ததியர் மகாஜன சபா” என்கிற சங்கத்தைச் சென்னையில்
...more

