Kindle Notes & Highlights
by
T. Dharmaraj
Read between
August 17 - October 16, 2022
எழுத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட தமிழ், தமிழர், தமிழகம் போன்ற கருத்தாக்கங்களுக்குக் கூடுதல் அழகைச் சேர்க்க வேண்டியே வாய்மொழி மரபுகள் பயன்படுத்தப்பட்டன.
எழுத்திலக்கிய வாசிப்பின் இடைவெளிகளை வாய்மொழி வழக்காற்று அறிவின் மூலம் நிரப்புவதும், நவீன எழுத்தை உருவாக்கும் உற்சாகமாக வழக்காறுகளை வரிந்து கொள்வதும் நடைபெற்றன. இது போலவே, நெடுங்காலமாய் எழுத்து சார்ந்த தகவல்களை மட்டுமே ஆவணங்களாகக் கொண்டு செய்யப்பட்ட வரலாறு, தனது நேர்மையும் முறைமையும் கேள்விக்குள்ளான போது வழக்காறுகளிருந்தும் வரலாற்றுத் தரவுகளைப் பெற முடியுமென்று சற்றே வளைந்து கொடுத்ததையும் நாம் கவனிக்க வேண்டும்.
அதிகபட்ச செவ்வியல் குணங்களுடன் வலியறுத்தப்படும் ‘தமிழ்ப் பண்பாடு' என்னும் மாயத் தோற்றத்திற்கான எதிர்வினைகளாகவே நாட்டார் பண்பாடு செயல்பட்டு வருகிறது. தட்டையான, நேர்கோட்டுத் தன்மையிலான எழுத்துப் பண்பாட்டிற்கு எதிரான கலகத்தை நாட்டார் பண்பாடு வெளிப்படுத்துகிறது என்பதை உணர்ந்து கொள்வதே பண்பாட்டு ஆய்வுகளின் இன்றைய தேவையுமாக இருக்கிறது.
'கலகக்காரர்களும் எதிர் கதையாடல்களும் ' என்ற பெயரிலான கட்டுரைகளின் தொகுப்பு இந்த அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சொல்லப்பட்ட செய்திகளுக்கும், அவற்றிலிருந்து கட்டப்பட்ட 'தற்காலத் தமிழகம்' என்ற பெருங்கதையாடலுக்கும் எதிரான வட்டாரம் சார்ந்த பல்வேறு எதிர் நிலைப்பாடுகளைப் பதிவு செய்வதே இத்தொகுப்பின் முதன்மைப் பணியாக அமைகின்றது. இவ்வாறு, நிறுவனமயப்பட்ட பெருங்கதையாடலுக்கு எதிராக முன் வைக்கப்படும் கலகக்கதையாடல்கள் பண்பாட்டுத் தளத்தை எல்லோருக்கும் பொதுவான வெளியாக மாற்றக்கூடும். அப்படியொரு வெளி உருவாகிற தருணத்தில், அதில் குறுக்கும் நெடுக்குமென பல்வேறு கதையாடல்கள் சமகாலத்தில் இயங்கக்கூடிய
...more
பலமுள்ள சாதியினரை நேரிடையாக எதிர்கொள்ள முடியாமல் பலமிழந்த சாதியினர் பயன்படுத்துகின்ற பல இலக்கிய வடிவங்களைத்தான் நலிந்தோரின் ஆயுதம் என்கிறோம். உயர்சாதியினரைக் கிண்டலடித்தும், நையாண்டி செய்தும் பாடல், நகைச்சுவை, சிறுகதைகள், கவிதை, பழமொழிகள், விடுகதைகள் போன்றவை உருவாக்கப்படுகின்றன. இந்த வடிவங்களில் உயர்சாதியினரை எதிர்க்கிற தொனி தூக்கலாகவே வெளிப்படுகிறது. இதன் மூலம் அவர்களை எதிர் கொண்டு விட்டது போல ஒரு கற்பனையான திருப்தியும் ஏற்படுகிறது.
சாதிய அடக்குமுறைக்கு எதிர்ப்புக் குரல் கொடுக்கும் கதைகள் சந்ததி விட்டு சந்ததி மாறும் போது கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்குகின்றன. ஏனெனில், அதற்கான தேவையும் குறைந்து விடுகிறது.
அவலங்களையும், அவற்றை எதிர்கொண்ட விதங்களையும், அவற்றை எதிர்த்த கலகங்களையும் பதிவுகளாக்கி எழுத்தினூடாகச் சகமனிதர்களுக்குப் பரப்பும் போது தமக்கான நீதியை, தமக்கான உரிமைகளைக் கேட்பதற்கான மனநிலை அவர்களுக்குள் உருவாகும். வரலாற்றை எழுதுவது மட்டுமன்றி எழுதப்பட்ட வரலாற்றை அழிப்பனவாகவும் செயல்படும், அபிமானியின்
தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 19 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்வதாகக் கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் நூற்றுக்கு மேற்பட்ட உட்பிரிவுகள் உள்ளதாக அறியப்படுகிறது. அவர்களில் முதன்மைச் சாதியாக பறையர், பள்ளர், அருந்ததியர் உள்ளனர். பத்தொன்பது சதவிகித தாழ்த்தப்பட்ட மக்களில் அருந்ததியர் சுமார் 3 சதவிகிதம் உள்ளனர். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகட்டத்திலேயே பள்ளர், பறையர், அருந்ததியர் எழுச்சிக்காகச் சில தலைவர்கள் தோன்றி அவரவர் மக்களுக்கு சங்கங்களை தோற்றுவித்தனர். இதில் அருந்ததியினருக்கென்று 1920 ஆம் ஆண்டு எல்.சி. குருசாமி என்பவர்’அருந்ததியர் மகாஜன சபா” என்கிற சங்கத்தைச் சென்னையில்
...more
தலித் சமுதாய விடுதலைப் போராட்ட வீரர் சுந்தரலிங்கம் பெயரில் அரசு பஸ் போக்குவரத்துக் கழகம் தொடங்கியதற்கு ஆதிக்க சாதியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதோடு சுந்தரலிங்கம் பெயரில் இயங்கிய பேரூந்தில் ஏறிச் செல்லக்கூடிய தங்கள் சாதியினர் அபராதம் கட்ட வேண்டும் என கிராமங்களில் உள்ள ஒரு குறிப்பிட்ட சாதி (தேவர்) அறிவிக்கவும் செய்தது. பேரூந்தின் பெயரை சாணியலாலும் தாராலும் அழித்து எதிர்ப்பைக் காட்டினர். இதனை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் பெயர்களை நீக்கி விட்டு பல்வேறு கோட்டங்களாகப் பிரித்து தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் எனப் பெயரிட்டது. இத்துடன் தமிழகத்தின் அனைத்து -
...more
திருச்சி மாவட்டம் கீழக்கல்கண்டார்கோட்டை கிராமத்தில் வாழ்ந்து வரும் திருமலை என்பவரின் பௌத்த, பார்ப்பனீய, ஞாபகக் குறிப்புகள் இக்கட்டுரையில் தொகுத்துத்தரப்பட்டுள்ளன.
காணி மக்களுக்கு பொதிகை மலைதான் உண்மையான வீடு. அதில் அவர்கள் கட்டும் வீட்டை சிறு நிழற்குடையாக மட்டும் கருதுகிறார்கள். எனவே தான் வீடு குறித்த மதிப்பீடுகள் அவர்களிடம் இல்லை. வீட்டை மிக அவசியமான ஒன்றாகக் கருதாததற்கு பொதிகை மலை முழுவதுமே தங்களுக்கு சொந்தமான வீடு என்கிற மனோபாவமே காரணம். கான்கீரிட்டுகளால் சூழப்பட்ட கட்டிடத்தையும் முத்திரைத்தாள்களில் பதிவு செய்யப்பட்ட நிலங்களையும் மட்டுமே தங்களுக்கு சொந்தமானவை என பிறர் மீதான பகைமையை அகத்துக்குள் வளர்த்துக் கொள்ளும் சமவெளி மக்களுக்கு காணி மக்களின் இம்மனோபாவம் புரிந்து கொள்ள முடியாத ஒன்று.
ஆடவர் பெயர்கள் மெய்யன், புகழவன், நிறைவு, அன்பு, இனியன், மகிழ்நன், எழில் அன்பன், இன்பம், தென்றல், இளம்பரிதி போல்வன; மகளிர் பெயர்கள் அருமை, இனிமை, பசுமை, இன்சுவை. இன்னிசை, இன்னகை, இளநகை, புன்னகை, மலர்மதி, கயல்விழி. கனிமொழி, கல்வி, முல்லை, பொற்கிளி, அன்புக்கரசி, அருங்கனி போல்வன.
பெண்ணுக்குத் திருமணம் செய்யும் போது மணமகன் வீட்டார் தாலி, காப்பு, பட்டுச்சீலை அளித்து மணப்பதே மரபாக உள்ளது. வரதட்சிணை அளிக்கும் வழக்கம் வாடியான் குடும்பங்களில் இல்லை. திருமணத்தில் மொய் எழுதும் பழக்கம் விருதுநகர் நாடார்களிடமும் இல்லை.
மன்னர்களின் வரலாறு வரலாறல்ல மக்களின் வரலாறே வரலாறு; வரலாறு மீண்டும் எழுதப் பெற வேண்டும் என்று எண்ணும் வாடியான் கூட்டத்தினர் தங்கள் வரலாற்றினைப் பதிவு செய்யும் முகமாக 19.01.1973 ல் முதன்முதலாக 'வாடியான் கொடி வழி மலரை' வெளியிட்டுள்ளனர். புதிய வாரிசுகளையும் இணைத்து 1995 அன்று இரண்டாவது கொடிவழி மலரை வெளியிட்டுத் தம் வம்சாவளியினை வாடியான்கள் உலகுக்குத் தெரியப்படுத்தி உள்ளனர்.
‘பரத்தி மகள் தெய்வானை பகவதியாள் இங்கிருக்க குறத்தி மேல் ஆசைகொண்டு வேலவர் குறவேசம் ஆனாரோ’
கன்னட மொழி பேசும் தேவாங்க செட்டியார் மைசூர் பகுதியில் வாழ்ந்த போது 'வீரமல்லம்மாள்' என்ற பெண்ணையும், வேலூரில் வசித்த பிள்ளைமார் இனத்து 'வேலம்மாள்' என்ற பெண்ணையும், திப்புசுல்தான் திருமணம் செய்து வைக்கும்படி கட்டாயப்படுத்தினான். பிற சமூகத்தினைச் சார்ந்தவனுக்கு மணம் செய்து கொடுக்க மனமின்றி மகள் மறுத்து, தாங்கள் வாழ்ந்த இடத்திலிருந்து இரவோடு இரவாகப் புலம் பெயர்ந்ததாகக் கதை கூறுகின்றனர்.
நாட்டுப்புறக்கதைகள் கிராம மக்களுக்கு அறிவூட்டும் நோக்கிலும், நல்வழிப்படுத்தும் போக்கிலும், அம்மக்கள் மனதில் எழும் எண்ணங்களின் பிரதிபலிப்பாகவும் அமைகின்றன.
’நாட்டுப்புறவியலானது, மனித சமுதாயம் எதை அனுபவித்ததோ, எதைக் கற்றதோ, எதைப் பயிற்சியால் பெற்றதோ அவற்றைக் குவித்து வைத்திருக்கும் சேமிப்பு அறையாகும்’ என்பர் ஔரலியா எம். எஸ்பிளோசா (சண்முகசுந்தரம், நாட்டுப்புறவியல் ப. 3).
‘தொட்டில் ஆட்டும் கையே தொல்லுலகை ஆளும் கை’
’தாய்மை உலகிற்கு வழங்கிய முதல் இலக்கியப் பரிசுதான் தாலாட்டு’
'ஆணாதிக்கச் சமுதாயத்தில் வாழும் பெண்ணின் குரலாகவே காண்கிறார்’ கவிஞர் கழனியூரன்.

