80 சதவீத விதியை தினந்தோறும் கடைபிடிக்க முடியாதவர்களுக்கு ஒரு மாற்று வழி இருக்கிறது. வாரத்தில் இரண்டு நாட்கள் உண்ணாவிரதம் இருப்பதுதான் அது. உண்ணாவிரதம் இருக்கும் இரண்டு நாட்களிலும் முழுப் பட்டினி கிடக்க வேண்டிய அவசியமில்லை. 500 கலோரிக்குக் குறைவாக உண்ண வேண்டும், அவ்வளவுதான். மற்ற ஐந்து நாட்களில் வழக்கம்போலச் சாப்பிட்டுக் கொள்ளலாம்.