நாம் நம்முடைய இருபதுகளில் இருக்கும்போதே நம்முடைய நரம்பணுக்கள் மூப்படையத் தொடங்குகின்றன. ஆனால் அறிவுக்குத் தீனி போடும் நடவடிக்கைகள், ஆர்வம், புதியவற்றைக் கற்றுக் கொள்வதற்கான விருப்பம் போன்றவை இந்த மூப்படையும் செயல்நடவடிக்கையைத் தாமதப்படுத்துகின்றன. புதிய சூழல்களை எதிர்கொள்ளுதல், தினமும் புதிது புதிதாக எதையாவது கற்றுக் கொள்ளுதல், விளையாடுதல், பிறருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளுதல் போன்றவை மூளை மூப்படையாதபடி பார்த்துக் கொள்வதற்கான வழிமுறைகளாகும். அதோடு, இவற்றைக் குறித்து ஒரு நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருப்பது கூடுதல் பலனளிக்கும்.