“தினமும் காலையில் வீட்டைவிட்டு வெளியே வந்து, 7.20லிருந்து 8.15வரை, பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கும் சிறுவர் சிறுமியரிடம் நான், ‘ஹலோ,’ என்றும் ‘அப்புறம் சந்திக்கலாம்!’ என்று கூறுவேன். என்னைக் கடந்து காரில் செல்கின்ற ஒவ்வொருக்கும் நான் கையை அசைத்து, ‘எச்சரிக்கையாக ஓட்டுங்கள்!’ என்று கூறுவேன். எல்லோரும் போன பின் நான் வீட்டுக்குத் திரும்பிவிடுவேன்.”