சினிக் தத்துவம் தனக்கு நல்வாழ்வைத் தரவில்லை என்பதை உணர்ந்து ஜீனோ அதை உதறித் தள்ளிவிட்டு, ஸ்டோயிக் தத்துவத்தை உருவாக்கினார். வாழ்வின் இன்பங்கள் உங்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராதவரை அவற்றை அனுபவிப்பதில் எந்தவிதமான தவறும் கிடையாது என்ற கருத்து ஸ்டோயிக் தத்துவத்தின் மையக் கருத்தாக விளங்குகிறது. அதே நேரத்தில், தங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்கின்றவர்களை அது நல்லொழுக்கவாதிகள் என்று அழைக்கிறது.