தியானப் பயிற்சியில் ஈடுபடும்போது நாம் கற்றுக் கொள்ளும் பாடங்களில் ஒன்று, நம்முடைய மனத்திரையில் அலைபாய்ந்து கொண்டிருக்கும் எதைக் குறித்தும் நாம் அலட்டிக் கொள்ளக்கூடாது என்பதாகும். நாம் தியானத்தில் இருக்கும்போது, நம்முடைய மேலதிகாரியைக் கொல்ல வேண்டும் என்ற யோசனை தலைதூக்கலாம். ஆனால் அதை எடைபோடாமலும் மறுதலிக்காமலும், அதை மற்றோர் எண்ணமாக வரையறுத்து, வானில் ஒன்றன்பின் ஒன்றாக வரும் மேகம்போல அது கலைந்து போக நாம் அதை அனுமதிக்க வேண்டும். அது வெறுமனே ஓர் எண்ணம் மட்டுமே. சில வல்லுநர்களின் கருத்துப்படி, நம் மனத்தில் அன்றாடம் அறுபதாயிரம் எண்ணங்கள் தோன்றுகின்றன.