எதிர்மறை உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கு புத்த மதத்தில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மந்திரம் இதுதான்: ‘ஓம் மணி பத்மே ஹூம்.” இந்த ஆறெழுத்து மந்திரத்திலுள்ள ‘ஓம்,’ அகங்காரத்தைத் தூய்மையாக்கும் பெருந்தன்மையையும், ‘ம,’ பொறாமையைத் தூய்மையாக்கும் நன்னெறியையும், ‘ணி,’ இன்ப வேட்கையைத் தூய்மையாக்கும் பொறுமையையும், ‘பத்,’ பாகுபாட்டைத் தூய்மையாக்கும் துல்லியத்தையும், ‘மே,’ பேராசையைத் தூய்மையாக்கும் சரணாகதியையும், ‘ஹூம்,’ வெறுப்பைத் தூய்மையாக்கும் ஞானத்தையும் குறிக்கின்றன.