More on this book
Kindle Notes & Highlights
எங்கும் ஆடம்பரம் இன்றி , மிகுந்த ரசனையுடன் ஒவ்வொரு அறையும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தின் செல்வச் செழிப்பை , கண்ணை உறுத்தாமல் அந்த அறைகள் எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தன. ' நான் நினைத்திருந்தால் இந்த மாளிகையின் ராணியாக இருந்திருக்கலாம் ! '
எல்லாவற்றிற்கும் மேலாக அவள் மனதில் நன்றி இருந்தது. தன்னைக் காதலித்ததற்கு மட்டும் அன்றி , இன்னமும் தன்னைக் காதலிய்ப்பதற்குமான நன்றி.
"நான் பேசுவது எதுவும் உன் துயரத்தை குறைக்குமானால் அதை நான் பேசிவிடுவேன். ஆனால் அப்படி எதுவும் இல்லாத நிலையில் , உன்னை இந்தத் துயரத்தை தாண்டும் தைரியத்துடன் இருக்கும்படி மட்டும் கேட்கிறேன்.
வேறெப்போதும் விட இப்போது அவர் தான் சேமிக்காமல் விட்டதற்கு வருந்தினார். அப்படிச் செய்திருந்தால் , பிரிட்டனின் மிக மோசமான இளைஞனை தன்னுடைய மகளுக்கு விலைக்கு வாங்கியதற்கு , தானே பணத்தைக் கொடுத்திருக்கலாம் என்று எண்ணினார்.

