Kindle Notes & Highlights
இந்த இயற்கை வளங்களின் அற்புதங்களைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கும் இந்த மக்களை நினைத்து வியப்படையவே செய்தேன். இங்கிருக்கும் பருத்தி , காபி , புகையிலை முதலியவற்றையும் , இங்கு கிடைக்கும் தாதுக்களையும் , சாதாரண முறையில் விளைவித்து , விற்பனை செய்தாலே இங்கிருப்பவர்கள் பெரும் செல்வங்களை சேர்த்திருக்கலாம். சிறிதளவே அதிகாரத்துடன் , பெருமளவில் வரி வருவாய் தரும் இது போன்ற நாட்டை நான் பார்த்ததே இல்லை.
Segu Abdul liked this
குன்னூரில் இருந்து உதகமண்டலம் செல்லும் ஒவ்வொரு மைலும் குளிர் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கேத்தி பள்ளத்தாக்குகளில் , மேஜர் கிரெவ் பராமரித்துக் கொண்டிருக்கும் நம் ஆங்கில கால்நடைகளைப் பார்க்கலாம். தெற்கே ஆரோக்கியமான செம்மறிகளும் , கால்நடைகளும் , இங்கிலாந்தின் உருளைக்கிழங்குகளுக்கு ஈடான உருளைக்கிழங்கு தோட்டங்களும் இருக்கின்றன. கேத்தியைத் தாண்டி எல்க் ஹில்லை ஏறி விட்டோம் என்றால் , அங்கிருந்து தெரியும் அழகிய காட்சியை ரசிக்கலாம். எல்க் ஹில்லின் சவுத்-டௌனில் இருந்து தொட்டபெட்டா வரையிலான பாதையும் , பயணமும் மிகவும் அழகாகவும் , அற்புதமாகவும் இருக்கும். இந்தப்
இந்தப் பழங்குடியினர் , புலிகள் தங்களைக் கடக்கும் போது எந்த பயமும் இன்றி உட்கார்ந்து கொண்டு , புலிக்கு ஒரு சிறு வரவேற்பும் , ஒரு சலாமும் இடுவதே இதற்கு நல்ல உதாரணம் ஆகும்.

