‘இடைக்காலத்தில்’ நிகழ்ந்த வன்முறைகள் பற்றிய விபரங்கள் மதங்களுக்கு இடையே பகைமையை வளர்த்துவிடக்கூடும் என்று அரை நூற்றாண்டுக்கு முன்பு சில இந்திய வரலாற்றியலாளர்களிடம் இருந்த பயத்தைப்போல, ஸ்டெப்பி இடப்பெயர்ச்சிகள் பழைய மொழிப் பிரிவினைகளுக்கும் பிராந்தியரீதியான பிரிவினைகளுக்கும் மேலும் வலுவூட்டக்கூடும் என்ற ஒரு பயம் இருந்திருக்கலாம். ஆனால் நடைமுறையில் உண்மைகளைத் தொடர்ந்து மறைத்துக் கொண்டிருப்பது பிரிவினை உணர்வுகளை குணப்படுத்தாது. அவை நம் பார்வைக்குப் புலப்படாமல் மேலும் அதிக வீரியத்துடன் வளர்வதற்கே அது வழி வகுக்கும்.