More on this book
Community
Kindle Notes & Highlights
உண்மையில், நாம் எப்போதெல்லாம் நம்முடைய ஆழமான வரலாற்றைப் புரிந்து கொள்ள முற்படுகிறோமோ, அப்போதெல்லாம் ‘தொன்று தொட்டு’ என்ற சொற்றொடர்தான் அடிக்கடி நம் காதுகளில் விழுகிறது.
‘இடைக்காலத்தில்’ நிகழ்ந்த வன்முறைகள் பற்றிய விபரங்கள் மதங்களுக்கு இடையே பகைமையை வளர்த்துவிடக்கூடும் என்று அரை நூற்றாண்டுக்கு முன்பு சில இந்திய வரலாற்றியலாளர்களிடம் இருந்த பயத்தைப்போல, ஸ்டெப்பி இடப்பெயர்ச்சிகள் பழைய மொழிப் பிரிவினைகளுக்கும் பிராந்தியரீதியான பிரிவினைகளுக்கும் மேலும் வலுவூட்டக்கூடும் என்ற ஒரு பயம் இருந்திருக்கலாம். ஆனால் நடைமுறையில் உண்மைகளைத் தொடர்ந்து மறைத்துக் கொண்டிருப்பது பிரிவினை உணர்வுகளை குணப்படுத்தாது. அவை நம் பார்வைக்குப் புலப்படாமல் மேலும் அதிக வீரியத்துடன் வளர்வதற்கே அது வழி வகுக்கும்.
ஏனெனில், ஒட்டுமொத்த வரலாறும் திட்டமிடப்படாத பின்விளைவுகளால் ஆன ஒன்று. எனவே, உண்மையைப் பேசுவதுதான் எந்தவோர் அறிவியலாளரும் அல்லது எந்தவோர் எழுத்தாளரும் எடுக்கக்கூடிய நியாயமான நிலைப்பாடாக இருக்க முடியும்.
‘தொன்று தொட்டு’ இன்றுவரை எந்தவொரு குழுவோ, இனமோ அல்லது சாதியோ ‘தூய்மையான’ ஒன்றாக இருந்து வரவில்லை.
இந்தியக் கலாச்சாரம் என்பது ஆரிய, சமஸ்கிருத அல்லது வேதக் கலாச்சாரத்தை ஒத்ததோ அல்லது அவற்றை ஒத்தப் பொருள் கொண்டதோ அல்ல. இந்தியக் கலாச்சாரம் என்று இன்று நாம் அறிந்து வைத்துள்ள தனித்துவமான கலாச்சாரத்திற்கு ஆரியக் கலாச்சார நீரோடை முக்கியப் பங்களிப்பை வழங்கியுள்ளது என்றாலும், ஒருக்காலும் அது ஒன்று மட்டுமே அதற்குக் காரணமல்ல. இந்தியக் கலாச்சாரத்தின் உருவாக்கத்தில் வேறு பல நீரோட்டங்களுக்கும் பங்கிருக்கிறது. இரண்டாவது, இந்திய-ஐரோப்பிய மொழிகள் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் இந்தியாவுக்குள் வந்தன என்று சொல்வதும், ஆரிய, சமஸ்கிருத அல்லது வேதக் கலாச்சாரம் முழுமையாக வளர்ச்சியடைந்த நிலையில்
...more
இந்திய-ஐரோப்பிய மொழிகளை இந்தியாவுக்கு கொண்டு வந்தவர்களும், இப்பகுதிகளில் ஏற்கனவே வெகுகாலமாகக் குடியேறியிருந்தவர்களும் ஒருவரோடு ஒருவர் கலந்துறவாடி, பரஸ்பரம் விட்டுக்கொடுத்து, விஷயங்களை ஒருவரிடமிருந்து மற்றொருவர் சுவீகரித்துக் கொண்டதன் மூலமாக ஆரியக் கலாச்சாரம் உருவாகியிருந்திருப்பதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம்.
பலதரப்பட்டப் பாரம்பரியங்கள் மற்றும் அனுபவங்களின் சாராம்சங்களிலிருந்து ஒரு தனித்துவமான கலாச்சாரத்தை உருவாக்குவதோடு தொடர்புடையதாகவே நம்முடைய பொது வரலாறு எப்போதும் இருந்து வந்துள்ளது. நாம் பல மூலங்களிலிருந்து உருவான ஒரு கலாச்சாரம், ஒரே ஒரு மூலத்திலிருந்து உருவான கலாச்சாரம் அல்ல.
நம்முடைய தொல்வரலாற்றிலிருந்து நாம் ஏதாவது ஒரு படிப்பினையைப் பெற வேண்டுமென்றால் அது எதுவாக இருக்கும்? நாம் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன ஒன்றுதான் அது: வேற்றுமையில் ஒற்றுமை!
இது கடினமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நம்முடைய நாகரிகத்தின் புத்திசாலித்தனம் அனைத்து மக்களையும் அரவணைத்துச் சென்றதில்தான் இருந்தது; சிலரை விலக்கி வைப்பதன் மூலம் அல்ல.
ஆக மொத்தத்தில் நாம் அனைவரும் இந்தியர்கள். நாம் அனைவருமே வெளியிலிருந்து இங்கு இடம் பெயர்ந்து வந்தவர்கள்தாம்!