More on this book
Community
Kindle Notes & Highlights
அவன் கொடுக்கும் முதல் முத்தம். மின்னல் ஒன்று உதட்டில் பதிந்து மறைந்தது போலிருந்தது.
Premanand Velu liked this
‘ஓட்டலுக் குருமாக் கொழம்ப நக்கி ருசி கண்டுக்கிட்டா அப்பறம் ஊட்டுச் சோறு ருசிக்காது’
அப்போதே பையனைக் கூட்டிக்கொண்டு ஊருக்கு வரச் சொல்லி அவள் அப்பனும் மாமன்களும் அழைத்தார்கள். மறுத்துவிட்டாள். என்னதான் பாசமாக இருந்தாலும் தூரமே உறவைத் தீர்மானிக்கும்.
பாசங்கீசமெல்லாம் பணமிருந்தாத்தான். ஒரம்பரையெல்லாம் வசதி இல்லீன்னா வாசலுக்குக்கூட இல்ல. எம்பையனுக்கு ஏழபாழையில ஒரு பிள்ள கெடைக்காதயா போயிருவா’
ஊரெல்லாம் அவளை எதிர்த்து நின்றபோதும் அவன் ஒருவன் கொடுக்கும் தெம்பில் உயிர் துளிர்த்திருந்தாள்.
Kaviya and 1 other person liked this
குமரேசன் அந்த நேரத்தில் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருப்பான். தொங்கும் சிம்னி வெளிச்சத்தில் அவனையே பார்த்துக்கொண்டிருக்கப் பிடிக்கும்.
அண்ணாந்து பாத்திருக்கற. அந்தரத்துல மொதக்கறாப்பல இருந்திருக்குது.
எப்போதாவது கரையும் காக்கைக் குரல் பனையிலிருந்து கேட்கும். அது போலத்தான் இருவரும் ஓரிரு வார்த்தைகள் பேசிக்கொண்டார்கள்.
ஆனால் அவள் மனத்தில் பயம் புரட்டக்கூட இயலாத பெருங்கல்லாய் உட்கார்ந்திருந்தது.
குமரேசன் உடனிருக்கும் இரவில் மட்டும் பாறை குளிர்ந்து அரவணைத்தது. மற்ற நேரமெல்லாம் வெம்மையும் புழுக்கமும்தான்.
வலுத்த மழ ஒன்னும் பெஞ்சிட்டா எல்லாம் மாறீரும்’ என்றான்.
எல்லாம் மாறிவிடுகிற மாதிரி ஒரு மழை பெய்யுமா? அவள் பெருமூச்சு விட்டாள்.
என்ன செய்தாலும் உள்ளே புதைந்து கிடக்கும் சந்தோசத்தைத் தோண்டித் தோண்டி எடுக்கும் வித்தை அவனிடம் உண்டு. இந்த
வேலை இருந்தால் எத்தனையோ பாரங்களை வேலை மேல் இறக்கி வைத்துவிட முடியும். வேலை நடக்க நடக்கப் பாரங்கள் குறைந்துகொண்டே போகும். வேலை முடிவில் எல்லாம்
லேசாகி ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும்.
‘ஊரு
சிரிக்குது எனக்கு. ஊர்கோலம் கேக்குது உனக்கு’
அப்படி என்ன செய்துவிட்டேன்? கல்யாணம் செய்து கொண்டது தப்பா? மனசுக்குப் பிடித்த பெண்ணொருத்தியைக் கட்டிக்கொள்ளக் கூடாதா? அதனால் யாருக்கு என்ன குறை
வந்துவிட்டது? அவள் என்மேல் உயிராக இருக்கிறாள். அவள்மேல் எனக்கும் உயிர். யாரிடமும் ஒருபைசா கேட்டுக் கையேந்தி நிற்கவில்லை. ஏன் எல்லா இடத்திலும் இப்படி விரட்டுகிறார்கள்? அம்மாவுக்குக்கூட இது புரியவில்லையே. எந்தப் பெண்ணைக் கட்டியிருந்தாலும் இப்படித்தானே குடும்பம் நடத்தப் போகிறேன். அதைப் பிடித்த பெண்ணோடு நடத்துகிறேன். அதனால் யாருக்கு என்ன குறை நேர்ந்தது?
மனிதர்களைவிட முள்ளும் மரமும் புதரும் எவ்வளவோ நல்லவை என்று அவளுக்கு அடிக்கடி தோன்றியிருக்கிறது.