பிரபா இப்போது புடவை கட்டிக்கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்து ஏமாந்து விடக்கூடாது. டாப்லெஸ்ஸாக வெளிநாட்டு பீச்களில் ஓடும் வீடியோ வைத்திருக்கிறாள். புடவை, பிரபாவை அழகாகக் காட்டுவதாகப் பலரும் சொல்லி அவளும் நம்பி விட்டாள். பார்ட் டைம் மாடலிங் செய்து கொண்டிருப்பவள் பிரபா. “எல்லோருமே பார்ட் டைம் மாடலிங் பண்றவளுங்கதானே” என்பது தீப்தியின் கமெண்ட்.