சின்னப்பொண்ணுவுடன் வேலை செய்யும் இன்னொருத்தி ஒருமுறை சின்னப்பொண்ணு மேல் உயரதிகாரி ஆசையாக இருப்பதாகக் கொடி காட்டினாள். ஆசைக்கு இணங்கினால் நிறைய சௌகர்யங்கள் கிடைக்கும் என்றும், ஆளும் பேண்ட் சட்டை எல்லாம் போட்டு டிப் டாப்பாகத்தான் இருக்கிறார் என்றும் சொன்னாள். அப்போது சின்னப்பொண்ணு, “என்னைய நிறைய பேர் சுத்தறாங்கன்னு எனக்கே தெரியும். சுத்தட்டும்னு விட்டுடுவேன். அன்னிக்கி விழாவுக்கு வந்த எம்எல்ஏ-வே வழிஞ்சிட்டு வார்த்தை விட்டுட்டுதான் போனாரு. ஆனா நான் யார் கிட்டயும் என்னை விட்டுக் குடுக்க மாட்டேன். அவன் மன்மதனா இருந்தாலும் சரி, மவராசனா இருந்தாலும் சரி. இதை நான் என் புருஷனுக்காக செய்யலை. எனக்காக
...more