"காதல் ஒரு வித்தியாசமான உணர்வு. சில சமயம் அது நோய். சில சமயம் அது மருந்து. சில சமயம் அது பட்டு மெத்தை. சில சமயம் அது புதைகுழி" என்பாள். "உனக்கு அது என்ன பாட்டி?" என்று கேட்டால், "எனக்கு அது என் கையைப் பிடிச்சுட்டு நடந்த சிறு பிள்ளை. முரண்டு பிடிக்கும். என் மேல மூத்திரம் போகும். மலம் கழிக்கும். அடி வாங்கும். கட்டிப் பிடிக்கும். கையை மட்டும் விடாது" என்பாள்.