More on this book
Community
Kindle Notes & Highlights
by
Ambai
Read between
May 13 - May 13, 2023
வீழ்தல் அவள் வாழ்க்கையின் அதிமுக்கியமான சொல்லாகத் தோன்றியது. அது அடிக்கடி அவள் மனத்தில் வந்துபோகும் சொல். திருச்சதகத்தில் "வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே" செய்யுளில் "பலகாலும் வீழ்கின்றாய் அவலக் கடலாய வெள்ளத்தே" என்று வரும். வீழ்ந்து வீழ்ந்து எழுபவள் அவள். இந்த முறை வீழ்தல் மட்டும் நிச்சயமான ஒன்று.
"அதிர்ச்சி இல்லை. ஆச்சரியம்தான். பத்து தலை ராவணன், வானரர்கள், பாம்புடல் இருக்கிற பதஞ்சலி, புலி உடம்பும் கையும் காலும், வண்டும் பூச்சிகளும் தொடாத அதிகாலைப் பூக்களைப் பறிக்க கையிலயும் காலிலயும் கண் இருக்கிற வியாக்ரபாதர், யானைத்தலை கணபதி, பாதி உடம்பு பொண்ணாயும் பாதி ஆணாயும் தலைமுடியில கங்கையும் ஒரு பக்கம் பிறை நிலவும் கழுத்துல பாம்பும் இருக்கும் சிவன், வாயைத் திறந்து பதினாலு லோகத்தையும் காட்டற ஒரு குழந்தை இதெல்லாம் இயல்பா எங்க வாழ்க்கையில இருக்கறபோது ஸைபோர்க்னு சொன்னா எல்லாம் அதிர்ச்சி அடைவேனா என்ன?
என்னிடம் பதில்கள் இல்லையென்றால் சுவாரசியத்தைக் கூட்டுவதற்குப் பொய் சொல்ல வேண்டும் என்றாய். ஆனால் பொய் சொல்லாமல் இருப்பதைத்தான் நான் மிகவும் சுவாரசியமான ஒன்றாக நினைக்கிறேன். அதனால்தான் நான் நாஸ்திகனாய் இருக்கிறேன்.
எங்கு பயணம் போகணும் என்று தெரியாத எதற்காக என்று முடிவு எடுக்க முடியாத பயணி அவன்."