குளித்து உடை மாற்றி, சமையல் பகுதிக்குப் போனபோது நுண்ணலை அடுப்பில் ஏதோ இருப்பதுபோல் இருந்தது. திறந்ததும் உணவின் வாசம் மூக்கைத் துளைத்தது. பாலடைக்கட்டி மென் சிவப்பாக மேலே போர்த்தியிருக்க, இஞ்சியும் பூண்டும் கொத்தமல்லி சீரகப் பொடியும் உப்பும் மிளகும் பாலும் மாவும் கலந்த காய்கறிகள் அதன் கீழே பதமாக வெந்திருப்பது தெரிந்தது. ஒரு வேளை இந்த அச்யுத் அவளுக்குத் தேவையெல்லாம் நல்ல சாப்பாடு என்று நினைத்துவிட்டானா? அதற்குப் பதினோராம் பரிமாணத்திலிருந்து எதற்கு வரவேண்டும்? அவளிருக்கும் பரிமாணத்தில் இதைச் செய்பவர்கள் இல்லையா என்ன? "உன் பரிமாணத்திலும் இதைச் செய்யறவங்க இருப்பாங்க ஆனால் இவ்வளவு அன்போடச்
...more