More on this book
Community
Kindle Notes & Highlights
by
Ambai
Read between
August 8 - December 18, 2022
"பாதை நீளமென்று தெரிகிறது. வழி தெரியவில்லை. இருட்டு. பாதைகளை மறைக்கும் அடர் காடு. போகுமிடம் மறந்துவிட்டது. எங்கோ தூரத்தில் அது. அதன் பெயர் தெரிந்தால் ஆசுவாசம் பிறக்கும். ஆனால் அதற்குப் பெயர் உண்டா? அப்படிப் பெயர் தெரிந்துவிட்டால் வழி புரிந்துவிடுமா?" மும்பாயில்
1870களில் க்ரஹாம் பெல் செவி கேளாதவர்களுக்கு வாய்ப்பேச்சு எனும் கல்வித்திட்டத்தை தீவிரமாகப் பிரசாரம் செய்யலானார். அவருடைய பல கண்டுபிடிப்புகளால் அவருக்குப் புகழும் அங்கீகாரமும் பணமும் கிடைத்திருந்ததால் இந்தக் கல்வித்திட்டத்தை அவரால் பிரசாரம் செய்ய முடிந்தது. நாடெங்கும் அவர் பயணம் செய்து, பேசாவிட்டால் செவிப்புலன் இல்லாதவர்கள் சமூகத்தில் முழுப்பங்கு வகிக்க முடியாது என்று பல இடங்களில் பேசினார். அறிவுஜீவிகள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் இவர்கள் செவியில் அவர் ஆற்றிய உரைகள் விழுந்தன. தன் குழந்தை பேச வேண்டும் என்று ஏங்கிய பெற்றோர்கள் காதிலும் விழுந்தது.
என்ன வந்தால் என்ன இன்னும் பெண்கள் வெண்புரவியில் வரும் அரசகுமாரனாகத்தான் வருங்காலக் கணவனைப் பற்றி நினைக்கிறார்கள்.
குளித்து உடை மாற்றி, சமையல் பகுதிக்குப் போனபோது நுண்ணலை அடுப்பில் ஏதோ இருப்பதுபோல் இருந்தது. திறந்ததும் உணவின் வாசம் மூக்கைத் துளைத்தது. பாலடைக்கட்டி மென் சிவப்பாக மேலே போர்த்தியிருக்க, இஞ்சியும் பூண்டும் கொத்தமல்லி சீரகப் பொடியும் உப்பும் மிளகும் பாலும் மாவும் கலந்த காய்கறிகள் அதன் கீழே பதமாக வெந்திருப்பது தெரிந்தது. ஒரு வேளை இந்த அச்யுத் அவளுக்குத் தேவையெல்லாம் நல்ல சாப்பாடு என்று நினைத்துவிட்டானா? அதற்குப் பதினோராம் பரிமாணத்திலிருந்து எதற்கு வரவேண்டும்? அவளிருக்கும் பரிமாணத்தில் இதைச் செய்பவர்கள் இல்லையா என்ன? "உன் பரிமாணத்திலும் இதைச் செய்யறவங்க இருப்பாங்க ஆனால் இவ்வளவு அன்போடச்
...more
நாம் பல பிரபஞ்சங்களின் ஓர் அங்கம் என்பதும் பல பிரபஞ்சங்களில் ஒரே சமயத்தில் இருக்க முடியும் என்பதும் எனக்குத் தெரியும். ஒன்றுமே இல்லாத வெறுமை கூட ஏதோவொன்று என்றும் எனக்குத் தெரியும் . .
என்னைப் பொருத்தவரை நான் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒன்றில் நம்புவது ஆறுதலை அளிக்கலாம் ஆனால் அது அதை உண்மையாக்குவதில்லை. எதை நான் உண்மையென்று அறிகிறேனோ அதில் நம்புவது எனக்கு ஆறுதலை அளிக்கிறது.
எல்லாவித ஆரம்பங்களும் மிகவும் சுலபமாக, எதிர்பாராமல் நேர்வதுதான்.
Marudhamuthu and 2 other people liked this