நான், நாங்கள் - எட்வினும் நானும் - வாழும் உலகில் ஒலி இல்லை. செவிக்கருவி மூலம் ஒலிச்சொட்டுகள் விழும். அவை சூடானவை. நெருப்பாய்ச் சுடுபவை. ஒலி ஒரு சாட்டை. வலியைத் தருவது. அதுதான் ஒலியுடன் எங்கள் உறவு. எங்கள் உலகில் வண்ணங்கள் உண்டு. காட்சிகள் உண்டு. மண் சிவப்பு. ரத்தச் சிவப்பு. அரக்குச் சிவப்பு. குங்குமச் சிவப்பு. கிளிப் பச்சை. பாசிப் பச்சை. தளிர்ப் பச்சை. அந்த நீலம். ஆகாயம். மென் நீலம். கரு நீலம். இரண்டும் கலந்த நீலம். அதனுள் புகுந்தால் மோனேயின் நீல ஓவியங்கள். ஆறும் சூரியச் சிவப்பும் கலந்து. அதில் நீந்திப் போனால் நீலச் சுவர்களுடன் வான்கோவின் படுக்கையறை ஓவியம். நீலச் சட்டைகள் தொங்கியபடி. மூடிய
நான், நாங்கள் - எட்வினும் நானும் - வாழும் உலகில் ஒலி இல்லை. செவிக்கருவி மூலம் ஒலிச்சொட்டுகள் விழும். அவை சூடானவை. நெருப்பாய்ச் சுடுபவை. ஒலி ஒரு சாட்டை. வலியைத் தருவது. அதுதான் ஒலியுடன் எங்கள் உறவு. எங்கள் உலகில் வண்ணங்கள் உண்டு. காட்சிகள் உண்டு. மண் சிவப்பு. ரத்தச் சிவப்பு. அரக்குச் சிவப்பு. குங்குமச் சிவப்பு. கிளிப் பச்சை. பாசிப் பச்சை. தளிர்ப் பச்சை. அந்த நீலம். ஆகாயம். மென் நீலம். கரு நீலம். இரண்டும் கலந்த நீலம். அதனுள் புகுந்தால் மோனேயின் நீல ஓவியங்கள். ஆறும் சூரியச் சிவப்பும் கலந்து. அதில் நீந்திப் போனால் நீலச் சுவர்களுடன் வான்கோவின் படுக்கையறை ஓவியம். நீலச் சட்டைகள் தொங்கியபடி. மூடிய நீலக் கதவுகள். நீலக் கண்ணாடிக் கிண்ணம், நீலக் கண்ணாடிக் குடுவை, நீல சீசாக்களுடன் மேசை. கட்டிலின் தலைப்பக்கம் மேலே நீலம் கலந்த ஓவியம். மஞ்சளும் சிவப்பும் இளம் பச்சையுமாய்க் கட்டிலும் மெத்தையின் மேல் போர்வையும் நாற்காலிகளும். மூடிய சன்னல்கள் பச்சை வண்ணத் தூரிகைத் தீட்டுகளுடன். பிறகு எட்வார்ட் மூங்க்கின் ஓலத்தைக் குறிக்கும் அந்த ஓவியம். மண்டையோட்டு முகத்தில் திறந்த வாய். அது பால் பேதமின்றி யாராகவும் இருக்கலாம். ஆணுமில்லாத பெண்ணுமில்லாத மனித உருவம். மனப்பிறழ்வுடன் ஆஸ்பத்திரியில் இருந்த சகோதரியைப் பார்த்த எட்வார்டின் சோகம், வரும் வழியில் மனத்தைப் பீடித்த பயம், சோர்வு எல்லாவற்றையும் கூறும் ஒலியில்லா ஓலம். எல்லாவற்றையும் ஓசையின்றிக் கூறும் திறந்த வாய். அத்தனையும் காட்சிகள். ஒலி தேவையில்லாக் காட்சிகள். ஒலி ஓர் ஆக்கிரமிப்பு. மௌனத்தை வீழ்த்துவது. மௌனம் ஒரு கடல். ரகசியங்கள் புதைந்த கடல். அதன் மேல் பறவைகள் பறக்கலாம். படகுகள் ஓடலாம். கப்பல்களும் போகலாம். மீன் பிடிப்பவர்கள் மீன் பிடித்து வாழ்க்கையை நட...
...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.