இருள் ஆள்கிறது; தூங்கு என் தேவதையே தாரகைகளுடனான விடியல் சோகத்தில் மூழ்கியிருக்கிறது சாவின் துர்நாற்றம் உலகெங்கும் கவிந்திருக்கிறது கவிதையும் இசையும் கூடிய அமர்வுகள் கலைந்துபோய்விட்டன அவற்றின் இடத்தில் தனித்திருக்கும் சோக நிழல்கள் வாழ்க்கை அசையாமல் நின்றிருக்கிறது செவிடாக உலகம் துன்பத்தில் பிரக்ஞை இழந்துவிட்டது கிணறுகள் விழித்திருக்கின்றன அழுகிய மனித உடல்களுடன் அக்கம் பக்கம் எல்லோரும் உறக்கத்தில். உயிரின்றி, தனிமையில், தவிப்பில் நெருப்பு குளிர்ந்துபோய்விட்டது பூமியோ பிரக்ஞையற்று இன்னும் மார்பில் குருதியும் சுரிகைத் துப்பாக்கிகளும் நாள் முழுவதும் வேலை செய்த இரும்பு உறங்கிவிட்டது உறங்கு