More on this book
Community
Kindle Notes & Highlights
by
Ambai
Read between
June 28 - June 30, 2024
வீழ்தல் அவள் வாழ்க்கையின் அதிமுக்கியமான சொல்லாகத் தோன்றியது. அது அடிக்கடி அவள் மனத்தில் வந்துபோகும் சொல். திருச்சதகத்தில் "வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே" செய்யுளில் "பலகாலும் வீழ்கின்றாய் அவலக் கடலாய வெள்ளத்தே" என்று வரும். வீழ்ந்து வீழ்ந்து எழுபவள் அவள். இந்த முறை வீழ்தல் மட்டும் நிச்சயமான ஒன்று.
வலசைப் பறவை இல்லை. காப்பர்ஸ்மித் பார்பெட் பறவை. தமிழில் அதை செம்மார்பு குக்குறுவான் என்பார்களாம்.
நான், நாங்கள் - எட்வினும் நானும் - வாழும் உலகில் ஒலி இல்லை. செவிக்கருவி மூலம் ஒலிச்சொட்டுகள் விழும். அவை சூடானவை. நெருப்பாய்ச் சுடுபவை. ஒலி ஒரு சாட்டை. வலியைத் தருவது. அதுதான் ஒலியுடன் எங்கள் உறவு. எங்கள் உலகில் வண்ணங்கள் உண்டு. காட்சிகள் உண்டு. மண் சிவப்பு. ரத்தச் சிவப்பு. அரக்குச் சிவப்பு. குங்குமச் சிவப்பு. கிளிப் பச்சை. பாசிப் பச்சை. தளிர்ப் பச்சை. அந்த நீலம். ஆகாயம். மென் நீலம். கரு நீலம். இரண்டும் கலந்த நீலம். அதனுள் புகுந்தால் மோனேயின் நீல ஓவியங்கள். ஆறும் சூரியச் சிவப்பும் கலந்து. அதில் நீந்திப் போனால் நீலச் சுவர்களுடன் வான்கோவின் படுக்கையறை ஓவியம். நீலச் சட்டைகள் தொங்கியபடி. மூடிய
...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
அன்பனே, நீ வரும்போது உடலெல்லாம் பூ மலரும் மழை பொழியும் மழை பொழியும் சோ சோவென்று குதூகலித்தபடி இரண்டு உள்ளங்கள்
"மன்ரே தூ காஹே ந தீர் தரே" மனமே ஏன் அலைபாய்கிறாய்?
மோகம் என்னவென்று அறியாத ஒரு நிர்மோகியை மோகிக்கிறாய் வாழ்க்கையில் உதித்து அஸ்தமிக்கும் சூரிய ஒளியை கட்டிப்போட்டவர் உண்டா? வண்ணங்களுக்குக் காவலிட முடியுமா? அழகைச் சிறையிட முடியுமா? ஏன் இந்த வீண் முயற்சி? சேர்ந்து இருந்த நாட்களெல்லாம் ஒரு கொடை என்று நினை வாழ்விலும் சாவிலும் பிரியாமல் இருப்பது
வசந்த், என் அன்பனே, எல்லாவற்றையும் முறித்துவிட்டு வந்திருக்கிறாய். சுதந்திரமாக இரு. உன்னைப் பிணைக்க மாட்டேன். உன்னைப் பிணைக்க நான் யார்? மௌனத்தைப் படிக்க வந்திருக்கிறாய் போலும். அதைப் புரிந்துகொள். உனக்குப் போதிக்க நான் யாருமில்லை. உனக்கான போதிமரம் இருக்கும் எங்காவது. இருந்தாலும் இதுவரை நீ பிணைந்திருந்த எல்லாவற்றிலிருந்தும் உனக்கு முக்தி அளிக்கிறேன். குடும்பப் பொறுப்புகளிலிருந்து முக்தி அளிக்கிறேன். பணம் சம்பாதிக்கும் நிர்ப்பந்தத்திலிருந்து முக்தி அளிக்கிறேன். குடும்பப் பாசத்திலிருந்து முக்தி அளிக்கிறேன். கூறியது, கூறாதது, கூற நினைப்பது, கூறப்போவது, எல்லாவற்றிலிருந்தும் முக்தி அளிக்கிறேன்.
...more
Kaviya liked this
எல்லாவற்றிலிருந்தும் முக்தி அளிக்கிறேன். எனக்கும் உனக்குமான காதலிலிருந்தும்.
அரே, அழுது அழுது விழிகள் நிரம்பின நிரம்பின கண்ணீர் வற்றி வற்றி எஞ்சின இப்போது விம்மல்கள்
"கடலோ மழையோ முழு நீலக்கல்லோ காயா நறும்போதோ படர் பூங்குவளை நாண் மலரோ நீலோற்பலமோ"
பெண்ணாக மாறியதுமே சில இயல்புகள் இருப்பதாக நினைப்பது, உணர்வது எல்லாமே அந்த உடலை ஒட்டி வகுத்திருக்கும் உலக விதிகளை ஏற்பதால்தான். மற்றபடி பெண் ஆண் என்பது கோடிட்டு வகுக்க முடியாத ஓடும் நதி போன்றதுதான்.
இருள் ஆள்கிறது; தூங்கு என் தேவதையே தாரகைகளுடனான விடியல் சோகத்தில் மூழ்கியிருக்கிறது சாவின் துர்நாற்றம் உலகெங்கும் கவிந்திருக்கிறது கவிதையும் இசையும் கூடிய அமர்வுகள் கலைந்துபோய்விட்டன அவற்றின் இடத்தில் தனித்திருக்கும் சோக நிழல்கள் வாழ்க்கை அசையாமல் நின்றிருக்கிறது செவிடாக உலகம் துன்பத்தில் பிரக்ஞை இழந்துவிட்டது கிணறுகள் விழித்திருக்கின்றன அழுகிய மனித உடல்களுடன் அக்கம் பக்கம் எல்லோரும் உறக்கத்தில். உயிரின்றி, தனிமையில், தவிப்பில் நெருப்பு குளிர்ந்துபோய்விட்டது பூமியோ பிரக்ஞையற்று இன்னும் மார்பில் குருதியும் சுரிகைத் துப்பாக்கிகளும் நாள் முழுவதும் வேலை செய்த இரும்பு உறங்கிவிட்டது உறங்கு
விழிகளைக் கண்ணீருடன் மெல்ல மூட விடாதே என்றென்றும் நட்சத்திரங்களுடனான உதயம் தொலைந்துபோகாது என்றென்றும் மனிதர்களுக்கு ரத்த தாகம் இருக்காது என்றென்றும் பூமியில் குருதி வடிந்தபடியே இருக்காது என்றென்றும் இரவு தொலைந்துபோகாது.
'கலே படா டோல் பஜானாஹி படேகா' (கழுத்தில் விழுந்த மத்தளத்தை அடித்துத்தான் ஆக வேண்டும்)
'கோடேவாலா ரோயே, சப்பர்வாலா ஸோயே' (பங்களாக்காரர்கள் அழுவார்கள், குடிசைவாசிகள் தூங்குவார்கள்) என்றாள்.
"கனெக்ஷன் சரியில்லை மாமி. குதிரை மூத்திரம்னு கேட்குது."
குதிரை மூத்திரம் போட்டு அலசி கருகருவென்று பளபளப்பாக வளராத முடியை ஒட்ட வெட்டவேண்டி வந்தது.
"அது வெறும் உடல் வடிவத்தைப் பொறுத்துதான். வெவ்வேறு இயல்புகள் கிடையாது. நீரோட்டம் மாதிரி ஓடற ஒண்ணுதான் எங்க பால்தன்மை. உறைஞ்சு இருக்கற ஒண்ணு இல்லை. இப்ப நான் உனக்கு முன்னால வந்த மாதிரி வேற எங்கேயாவது ஒரு பெண் ஸைபோர்க் யார் முன்னாலாவது வந்திருக்கலாம். அது ஆணாக இருக்க வேண்டிய அவசியமில்லை."
எல்லாவித ஆரம்பங்களும் மிகவும் சுலபமாக, எதிர்பாராமல் நேர்வதுதான். கோட்பாடுகள் சமன்பாடுகள் எல்லாமே நாம் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் தான் நேர்கின்றன.
இவர்களுக்குச் சிரிக்கத் தெரியாது. கஷ்டப்பட்டுத்தான் சிரிப்பார்கள். நகைச்சுவையாகச் சொல்வார்கள், ஃபின்களிடம் சனிக்கிழமை எந்த நகைச்சுவைத் துணுக்கையும் சொல்லக்கூடாது; அவர்கள் அதற்கு ஞாயிற்றுக்கிழமை தேவாலயப் பிரார்த்தனையின்போது சிரித்துத் தொலைப்பார்கள் என்று!