நாளிதழ்கள்அறிவைச் சுமந்து வருபவை. தினம் தினம் தன்னைப் புதிய விஷயங்களால் புதுப்பித்துக் கொள்பவை. நாளிதழைச் சுமந்து வருபவன் நமக்கு அறிவைச் சுமந்து வருகிறான். நாம் இந்த உலகோடுச் சமகாலப் பிரக்ஞையோடு உறவாட வகை செய்கிறவன் அவனே என்பது நம்மில் பலருக்குப் புரிவதில்லை.