எப்போதும் இரண்டு வகையான மேஜைகளைப் பயன்படுத்துங்கள். ஒரு மேஜையில் புத்தகங்கள், தாள்கள், பென்சில்கள், வர்ண பேனாக்கள் உள்ளிட்டவைகள் மட்டும் இருக்கட்டும். எக்காரணம் கொண்டும் எலெக்ட்ரானிக்ஸ் டிவைஸ்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இது ஐடியாக்களை உருவாக்கும் மேஜை. இங்கே நீங்கள் சிந்தித்தவற்றை பேப்பரில் கிறுக்கவோ, வரையவோ செய்யுங்கள். யோசிக்கும்போது ஒருபோதும் கவனச்சிதறல் ஏற்படுத்தும் செல்போனோ, லேப் டாப்போ அந்த மேஜையில் இருக்கக்கூடாது. இன்னொரு மேஜை டிஜிட்டல் மேஜை. நீங்கள் சிந்தித்தவற்றிற்கு எழுத்து வடிவம் கொடுக்க கணிணியைப் பயன்படுத்துங்கள்.

