நீங்கள் நெருங்கிப்பழகும் நண்பர்கள், புத்தகங்கள், ரசனைகள் ஆகியவற்றின் மீது கவனமாக இருங்கள். விரும்பிய உலகில் நீங்கள் வாழ வாய்க்கவில்லையெனில் உங்களுக்கேற்றபடி உங்கள் உலகை வடிவமைத்துக்கொள்ளும் உரிமையும் வசதியும் உங்களுக்குள்ளதை மறக்கவேண்டாம். ஓர் அறையிலுள்ள மனிதர்களில் மிகச் சிறந்தவர்களைக் கண்டுபிடியுங்கள். ஒருவேளை அது நீங்களாக இல்லாதபட்சத்தில் அந்த சிறந்த மனிதனோடே இருந்து விடுங்கள் என்றார் ஹெரால்ட் ராம்ஸ். ஒருவேளை நீங்கள் தேடும் சிறந்த மனிதர் அந்த அறையில் இல்லையெனில் அடுத்த அறைக்கு அடுத்த அறைக்கு என உங்கள் தேடலைத் தொடருங்கள்.

