எல்லாவற்றிற்கும் மேலாக எலிகளைப் பெருமளவில் வேட்டையாடி, காற்றில் சாடி வெட்டுக் கிளிகளை அழித்து. நெற்பயிரை அழிக்கும்ஒருவகை தண்டுப்புழுக்களை உண்டு விவசாயிகளின் பெரும் தோழனாகவும் விளங்குவது வவ்வால். காடுகளில் சில வகைத் தாவரங்கள் பூச்சிகளால் அழியாமல் இருக்க வவ்வால்கள் உதவுகின்றன. வவ்வால்களின் எச்சங்கள் மூலம் மட்டுமே பரவக்கூடிய தாவரங்களும் அதிகம் உண்டு. சிலவகை வவ்வால்கள் கொசுக்களைக்கூடக் கட்டுப்படுத்துகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.