எப்போதும் வாசித்துக்கொண்டே இருங்கள். வாசிக்க நேரம் வாய்க்காவிட்டாலும் உங்களைச் சுற்றி எப்போதும் புத்தகங்கள் இருந்துகொண்டே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஏதேனும் மிக சுவாரஸ்யமாக உங்களைக் கவர்ந்தால் அதை ஒரு ஸ்க்ராப் ஃபைலில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். ஒரு துண்டுச் சீட்டு, நாளிதழ் கிழிசல், பஸ் டிக்கெட்டின் பின்புறம் கிறுக்கியது என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், சேமித்துக்கொள்ளுங்கள். பிற்பாடு நீங்கள் ஸ்க்ராப் ஃபைலை புரட்டும்போது உங்களுக்குள் புதிய திறப்புகள் உருவாகலாம்.

